அரசியல் கைதிகளின் விடுதலைக்காக உயர்மட்ட கலந்துரையாடலில் அங்கஜன்

இதுவரை காலமும் வழக்கு பதிவு செய்யப்படாமல் சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக மேலதிகமாக மேற்கொள்ளபட வேண்டிய பொறிமுறைகள் மற்றும் ஆரம்ப கட்ட நடவடிக்கைக்கள் குறித்து ஆலோசிப்பதற்காக ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட விசேட குழு சார்பில் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன், கிழக்கு அபிவிருத்தி பிரதியமைச்சர் வியாழேந்திரன் மற்றும் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் மஸ்தான் ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ ஆகியோர் 28/11 அன்று மாலை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

அதேவேளை அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட விசேட குழு சார்பில் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன், கிழக்கு அபிவிருத்தி பிரதியமைச்சர் வியாழேந்திரன் மற்றும் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் மஸ்தான் ஆகியோர் கௌரவ நீதியமைச்சர் சுசில் பிரேமஜயந்த உடனும் முக்கிய கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தனர்.

விவசாய பிரதி அமைச்சர் வட கிழக்கு விவசாய பெருமக்களை பொன்னான யுகம் நோக்கி அழைத்து செல்ல சிறந்த செயல்திட்ட நகர்வுகளை மேற்கொண்டு வரும் இந்நிலையில் மீனவர்கள்,அரசியல் கைதிகளின் விடுதலை,காணி விடுவிப்பு,மீள்குடியேற்றம்,வாழ்வாதார மேம்பாடுகள்,இயற்கை அனர்த்த சூழ் நிலையின் போதான இழப்பீடு,காப்புறுதி தொடர்பாகவும் கவனம் செலுத்தி விடயங்களிற்கு பொறுப்பான அமைச்சுடனும் சந்திப்புடன் கூடிய கலந்துரையாடலை மேற்கொண்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக உயர்மட்ட கலந்துரையாடலில் அங்கஜன் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக உயர்மட்ட கலந்துரையாடலில் அங்கஜன் Reviewed by Vanni Express News on 11/28/2018 05:52:00 PM Rating: 5