புதைக்கப்பட்ட நிலையில் குழந்தையின் சடலம் மீட்பு குழந்தையின் தந்தை கைது

-சசிகரன் வவுனியா நிருபர்

ஓமந்தை விளாத்திகுளம் பகுதியில் இன்று அதிகாலை குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கர்பிணியான தாய் குழந்தையை வீட்டிலேயே பிரசவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

குழந்தை உயிரிழந்த நிலையில் பிறந்தமையால் அதனை நிலத்தில் புதைத்திருக்கலாம் என்று போலிசார் கூறினர். 

சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியபடுத்தபட்டதுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் நிலத்தில் புதைக்கபட்டிருந்த குழந்தையை மீட்டுள்ளனர். 

குழந்தையின் தந்தையை கைது செய்துள்ளதுடன் தாய் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். 

மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதைக்கப்பட்ட நிலையில் குழந்தையின் சடலம் மீட்பு குழந்தையின் தந்தை கைது புதைக்கப்பட்ட நிலையில் குழந்தையின் சடலம் மீட்பு குழந்தையின் தந்தை கைது Reviewed by Vanni Express News on 11/30/2018 05:59:00 PM Rating: 5