முஸ்லிம் கட்சிகளின் ஒற்றுமை உணரப்படவேண்டிய தருணம்

-ஆப்தீன் எஹியா

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி, அரசியல் யாப்புக்கு முரணான தீர்மானம், ஜனநாயகத்துக்கு விரோதமான செயற்பாடுகள் என்று உச்ச எல்லையை அடைந்துள்ளது. 

ஒரு காலத்தில் சிறுபான்மை அரசியல் கட்சிகள் பணத்திற்காகவும் பதவிகளுக்காகவும் அரசோடு  ஒன்று சேர்ந்துக் கொள்வதை தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் விமர்சிக்கப்பட்ட காலம் மாறி  இன்று மிகவும் நேர்மையாக  முஸ்லிம்களின் கெளரவத்தையும் தனித்துவத்தையும்  பாதுகாப்பதுடன் நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக இரு முஸ்லிம் காட்சிகளும் ஒன்றினைந்து பயணிப்பதைக்கொண்டு சந்தோசமடைகின்றோம்.

இதற்காக நாடுபூராக இருக்கின்ற இந்த இரண்டு கட்சிகளின் போராளிகள் பிரார்த்தனை செய்வதோடு தங்களது அறிக்கைகளையிடவேண்டும்.

மேலும்  நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழ்நிலை, அதிகார பகிர்வு போட்டிகள், இனவாத கோஷங்களுக்கிடையில் முஸ்லிம் சமூகம் நசுக்கப்படுவதிலிருந்தும், முஸ்லிம்களையும், முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை  பாதுகாத்துக்கொள்ள இந்த இரண்டு கட்சிகளான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைகளும் அதன் போராளிகளும் ஒரே கோஷத்தோடு அரசியல் செய்வது காலத்தின் தேவையாகவும் முஸ்லிம் சமூகத்தின் எதிர்ப்பாகும்.

தமிழ் கூட்டணி ஒன்றிணைந்து அரசியல் செய்கின்ற போது, மலையக கூட்டணி ஒன்றிணைந்து அரசியல் செய்கின்ற போது, இந்த இரண்டு முஸ்லிம் கட்சிகளும் ஒண்றிணைவது காலத்தின் தேவையாகியுள்ளது.

இதனை புரிந்துக்கொண்டு இரு கட்சிகளும் ஏற்படுத்தி இருக்கின்ற உடன்பாடு, நல்லிணக்கம், அவர்களின் ஒற்றுமைக்கும் நாம் பிரார்த்திக்கின்றோம். இந்த இரண்டு கட்சிகளும் ஒண்றிணைந்து மிக நேர்மையான தீர்மானங்களை மேற்கொண்டு முஸ்லிம் சமூகத்துக்காக  போராடவேண்டும்.

எதிர்காலத்தில்  சிறுபான்மை சமூகம் பாராளுமன்ற பிரதிநிதிகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கும் மாவட்டங்களில் இந்த இரண்டு கட்சிகளும் ஒரே கோஷத்தோடு தனது அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு எம் சமூகத்திற்கு பாராளுமன்ற பிரதிநிதிகளை பெற்றுத்தர வேண்டும் என எதிர்ப்பார்க்கின்றோம். இதை நாடுபூராகவும் இருக்கின்ற இரு கட்சிகளினதும் போராளிகளும் இந்த நிர்ப்பந்தத்தினை கட்சி தலைமைகளுக்கு கொண்டுச் செல்ல வேண்டும் என்று  எனது பணிவான வேண்டுகோள்.
முஸ்லிம் கட்சிகளின் ஒற்றுமை உணரப்படவேண்டிய தருணம் முஸ்லிம் கட்சிகளின்  ஒற்றுமை உணரப்படவேண்டிய தருணம் Reviewed by Vanni Express News on 11/11/2018 01:22:00 AM Rating: 5