haiiii

சஜித்தின் வருகை காலத்தின் கட்டாயமான இன்றைய தேவை - அதிரும் அரசியல்

-ஐனுதீன், சவூதியிலிருந்து.

இலங்கையில் இன்று நடந்து கொண்டு இருக்கும் இழு பறி அரசியல் நகர்வுகளைக் பார்க்கையில் பணத்துக்கும் பதவிக்கும் கட்சிகள் பிளவுபட்டு அங்கும் இங்கும் உறுப்பினர்கள் பயந்து கொண்டு ஒரு வேடிக்கை அரசியல் நடைபெறுவதை நம் நாட்டு மக்கள் மட்டுமல்ல முழு உலகும் உற்றுப்பார்த்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் ஒரு தெளிவான நிலையில் மஹிந்தா இருக்கிறார். ஆனால் ரணில் அவர்கள் கல்லில் பேன்ற பூனை போல் என்னா செய்யலாம் என்ற ஒரு கேள்விக் குறியாகத்தான் இருக்கிறார். இந்த இக்கட்டான நிலையில் நாட்டு மக்களின் நலனைக் கருத்தில்க் கொண்டு ஐ, தே, கட்சி ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் அந்த முடிவு மஹிந்தாவை தோல்வி காண வைக்கும் முடிவாக அமைய வேண்டும். இந்த அடிப்படையில் நாம் இங்கு ஒரு ஆய்வினைப் பார்ப்போம்.

அதாவது, இலங்கை மூன்று வகை மக்களைக் கொண்ட ஒரு நாடாகும்  

01) பாமர மக்கள்
02) அன்றாடம் உழைக்கும் மக்கள்
03) மேல் ஜாதி மக்கள்.

இந்த அடிப்படையில் ஸ்ரீரிமா அம்மையார், ஜே, ஆர், சந்திரிக்கா, ரணில், மஹிந்தா போன்ற மேல்க் குடி வர்க்கத்தவர்களின் ஆட்சியை விட பாமர மக்கள் மத்தியில் நங்கு சொல்வாக்கு பெற்று விழங்கிய அரசியல்தான் இலங்கையில் எடு பட்டது . இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்ததும் அதுதான் அந்த அரசியலைச் செய்தவர்தான் எமது பிரமதாசா அவர்களாவர்கள். இலங்கை அரசியல் வரலாற்றில் நீண்ட இடம் பிடித்தவரும் இவர்தான்.

அதாவது, ஜனசக்தி மூலம் வேலை வாய்ப்பினை ஏழைகளுக்கு அள்ளி கொடுத்தும், ஊருக்கு ஊர் ஆடைத் தொழில்ச் சாலைகளைத் திறந்து இலட்ச்சக் கணக்கான மக்களுக்கு தொழில் வழங்கியது மட்டும் அல்லாமல் பாடசாலை மாணவர்களுக்கு  உலர் உணவு வழங்கி மஹாபொல பரிசுப் பணத்தை அதிகமாக்கி வீடற்ற மக்களுக்கு வீடுகளை வழங்கி ஏழை எளிய பாமர மக்கள் மனதில் இடம் பிடித்தது மட்டுமல்லாது. இந்தியாவிலுள்ள புத்தகல எனும் இடத்திலும் வீடு இல்லாது வாழும் மக்கள் நிலை கண்டு வீடு கட்டிக் கொடுத்து தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தவர் பிரமதாசா அவர்கள். 

மேலும், தமது வாக்குறுதிக்கு அமைய பதவிக்கு வந்ததும் இந்தியா இராணுவத்தை எமது நாட்டைவிட்டு வெளியேற்றி மூன்று வர்க்க மக்களையும் கவர்ந்த நிலையில் அவரின் மரணத்துக்குப் பின் அவரின் வழி சென்று பாமர மக்களை தன் வழி மாற்றிக் கொண்டார் மஹிந்தா. இந்த மஹிந்தாவை தோக்கடிக்க ஐ, தே, கட்சிக்கு இருக்கும் மூன்று பேர்களில் ரணில் அவர்கள் மத்திய வங்கி ஊழல், அம்பாந் தோட்டை விமான நிலையம் ஊழல் என ரணிலின் அராஜகம் எப்படி மஹிந்தாவின் ஊழலைத் தட்டிக் கேட்க்க முடியும். 

அது கள்ளனைக் கள்ளன் விமர்சிப்பது போல் கேலியாகும். அதே வேளை கரு ஜெயசூரியா அவர்களை எடுத்துக் கொண்டால் அவர் மேல்க் குடி மக்களுக்கு சேவை செய்து வந்தவர் அது சாதாரண மக்களிடம் எடுபாடாது. ஒரு வட்டத்துக்குள் நின்று கொண்டு குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் இயங்கும் தன்மையுடையவர் . பரந்தளவு மக்கள் செல்வாக்கு அற்றவர்.இதே போல் அவர் மஹிந்தாவிடம் கட்சி மாறி ஓடிப் போய் "பொது நிர்வாக உள் நாட்டு அமைச்சராக" இருந்து மீண்டும் கட்சி தாவியவர் இதனால் கட்சியின் தலைமைப் பொறுப்பு இவரிடம் எடுபடாது. அதே நேரம் மஹிந்தாவின் சக்தியிடம் இவரின் செல்வாக்கு தோல்வி காணும்.

இப்ப இருக்கும் சரியான தெரிவு சஜித் பிரமதாசா அவர்கள் இவரை பற்றி அதிகம் சொல்லலாம். கறை படியாத ஆட்சி, இனமத பேதங்கள் இன்றி பரந்தளவு சேவைகள், பதவிக்காக விலை போகாதவர், கடும் போக்கு இல்லாதவர், அரசியல் இலாபம் தேடாதவர். இன வாதம் இல்லாதவர், கிராம மட்ட மக்களிடம் நல்ல மரியாதை உள்ளவர்,  தனது அப்பாவை கடவுளாக நேசித்த வேடர்களை மஹிந்தா பிரமதாசாவின் பின் தன் வசப்படுத்தினார் அதை மீட்டு எடுக்கும் சக்தியுள்ளவர் என பல நல்ல பழக்கவழக்கமுள்ள சஜித் மட்டுந்தான் சரியான தெரிவாகும்.

ஊழல் என்று பார்க்கையில் சஜித் கறை படியாத நபர். தனது அலுவலகத் தேவைக்காக அரசு ஒதுக்கும் பணத்தில் செலவுகள் போக மிகுதிப் பணத்தை சரியான கணக்கு காட்டி மீண்டும் அரசிடம் வருடா வருடம் ஒப்படைப்பவர், தன் அமைச்சுக்கு வழங்கப்பட்ட வாகனம் ஒன்றை மட்டும் பயன் படுத்தி தனது சொந்த தேவைக்கு அரச சொத்தை பயன் படுத்தாத இவர் மஹிந்தா, மைத்திரி,ரணில் போன்றோர்களை விட மக்கள் மத்தியில் செல்வாக்கிலும்  மேலானவர்.

ஆனால், மஹிந்தா சஜித்தை உள் வர விடமாட்டார் மஹிந்தாவுக்கு ஐ,தே, கட்சியில் ரணில் இருக்கும் வரைதான் செல்வாக்கு மக்கள் மத்தியில் இருக்கும் அது சஜித் அவர்களின் கை மாறும் போது மஹிந்தாவின் குடும்ப அரசியல் முடிவுக்கு வரும் அது மஹிந்தாவுக்கும் தெரியும். ரணில் செய்த வீழ்ச்சியைத் துக்கி நிறுத்த இருக்கும் ஒரே ஆயுதம் சஜித் மட்டுந்தான்.

ஆகவே, இந்த இக்கட்டான சூழலில் மீண்டும் மஹிந்தா ஆட்சி அமைத்தால் ஒரு வருடகாலத்தில் தனது மகனின் எதிர்கால அரசியலுக்காக வேண்டி முதல் வேலையாக ஐ, தே, கட்சியைக் கந்தல் ஆடையாக மாற்றிவிடுவார் மீண்டும் இருபது வருடங்கள் கட்சி பின்னோக்கிப் போய்விடும் என்பதை கருத்தில்க் கொண்டு ஐ,தே, கட்சியின் பாராளுமன்ற உள்ளூராட்ச்சி சபை உறுப்பினர்களே கட்சியின் தோன்டர்களே! மஹிந்தா எதிர்ப்பு இப்போது தேவையில்லை ரணில் அவர்களுக்கு எதிராக வெகுண்டு எழுந்து சஜித் அவர்களைக் கொண்டு வாருங்கள் இதுதான் இன்றைய காலத்தின் கட்டாயத் தேவை தாமதம் வேண்டாம் எதிர் வரும் 14ம் திகதி பாராளுமன்றம் கூடுவதுக்கு முன் முடிவெடுங்கள். வெற்றி பெறுவீர்கள். மஹிந்தா சாம்ராஜ்ஜியத்தை ஒழித்தும் கட்ட முடியும்.
  
நன்றி,
ஐனுதீன், சவூதியிலிருந்து.
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,
ltr
item
Vanni Express News: சஜித்தின் வருகை காலத்தின் கட்டாயமான இன்றைய தேவை - அதிரும் அரசியல்
சஜித்தின் வருகை காலத்தின் கட்டாயமான இன்றைய தேவை - அதிரும் அரசியல்
https://3.bp.blogspot.com/-y-MSDHM4SZg/W-GBYuqc-dI/AAAAAAABRF4/95LUlUzgUPcP2bzal4L7XyT_UltmLBRYACLcBGAs/s640/V.E.N.Media.jpg
https://3.bp.blogspot.com/-y-MSDHM4SZg/W-GBYuqc-dI/AAAAAAABRF4/95LUlUzgUPcP2bzal4L7XyT_UltmLBRYACLcBGAs/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2018/11/article_6.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2018/11/article_6.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy