தற்போதைய அரசியல் குழப்ப நிலைக்கு மைத்திரியும் ரணிலுமே காரணம்

-லத்தீப் பாரூக்

ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவும் அவரால் பதவி நிக்கம் செய்யப்பட்ட
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுமே இன்று எற்பட்டுள்ள அரசியல் குழப்ப
நிலைக்கு மூல காரணமானவர்கள் ஆவர். நாட்டில் நிலவும் அரசியல் பெருளாதார ஸ்திர நிலையற்ற நிலைமையின் நடுவே நாட்டை அரசியல்சாசன நெருக்கடி நிலைக்குள் தள்ளி ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ரணில் மைதிரி ஆகிய இருவரும் 2015 ஜனவரி 8 ஜனாதிபதி தேர்தலின் போது நாட்டு மக்களுக்கு பெரும் வாக்குறுதிகளை அளித்தனர். நூட்டை சூறையாடியவர்கள் அனைவரையும் சட்டத்தின் மன் நிறுத்தி நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவோம் என்பது அவர்கள் அளித்த முக்கிய வாக்குறுதி. குற்றங்கள் புரிந்து ஜனநாயகத்துக்கு மெல்ல மெல்ல சாவுமணி அடித்தவர்களை சட்டத்தின் மன் நிறுத்துவேம் என்று அவர்கள் அளித்த வாக்குறுதியை இந்த நாட்டு மக்கள் நம்பினர்.

நூட்டில் அமைதியும் சமாதானமும் நல்லிணக்கமம் மீண்டும் நிலைநிறுத்தப்படும் என்று உச்ச பட்ச நம்பிக்கையோடு சகல இன மக்களும் அவர்களுக்கு வாக்களித்தனர். ஆனால் இருவருமே இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதோடு மட்டுமன்றி இந்த
நாட்டையே மோசமான நிலைக்கு கொண்டு சென்றனர்.
குற்றமும் ஊழலும் புரிந்தவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடப்பதற்கு பதிலாக ரணில் மைதிரி அரசு சம்பந்தப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளித்தது. முகிந்த ராஜபக்ஷ சர்வதேச குற்றவாளியாகப் பிரகடனம் செய'யப்படவிருந்ததை தடுத்து காப்பாற்றியவர் ரணில் விக்கிரமசிங்கதான் என்று ஒரு மாதத்துக்கு முன்னர் மங்கள சமரவீர அறிவித்திருந்தார். இதுதான் நீண்டகாலமாக இடம்பெற்று வந்த
விடயம். நாட்டை சூறையாடிக் கொண்டு அவர்கள் ஒருவருக்கொருவர் காப்பாற்றி வந்தனர்.

தமிழ் மக்கள் பல்Nவுறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வேண்டி நிற்கின்றனர். சமாதானமும் நல்லிணக்கமும் மலரும் என்ற நம்பிக்கையில் அவர்களுக்கு வாக்களித்த 
முஸ்லிம்கள் சிங்கள் இனவாத சக்திகளிடம் இருந்து வன்முறைகளைச் சந்தித்தனர். போலிஸும் விஷேட அதிரடி படையும் அதற்கு உடந்தையாக இருந்தன. ஜனாதிபதி மைதிரி மீதும் பிரதமர் ரணில் மீதும் நம்பிக்கை கொண்ட சிறுபான்மையினர் தங்களுக்கு இருவரும் துரோகம் இழைத்து விட்டதாகவே இன்று
நம்புகின்றனர். முகிந்த ஆட்சி காலத்தில் நடந்த பேருவளைரூபவ் அளுத்கமை மற்றும் தர்காநகர் சம்பவங்களையும்ரூபவ் தற்போதைய ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ் இடம்பெற்ற கின்தோட்டைரூபவ் அம்பாறைரூபவ் அக்குறணைரூபவ் திகணை சம்பவங்களையும்
முஸ்லிம்கள் மறக்கவில்லை.
துங்களுக்குள்ள சிங்கள மக்களின் வாக்குகளைத் தக்கவைத்தக் கொண்டு ஆட்சியில் நிலைத்திருப்பதற்காக இந்தச் சம்பவங்களை ஆட்சியில் இருந்த எவருமே பொருட்படுத்தவில்லை. ஊள்நாட்டில் கொழுந்து விட்டெறியும் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் அப்படியே இருக்க ஜனாதிபதியும் பிரதமரும் மாறிமாறி உலக நாடுகளைச் சுற்றி வந்தனர். ரணில் விக்கிரமசிங்க இதுவரை பிரதமர் என்ற ரீதியில் 30க்கும் அதிகமான வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டுள்ளார்.
இன்று அமெரிக்க ஐரோப்பிய மற்றும் இஸ்ரேல் யுத்த வெறியர்களின் கைக்கூலி நிலையமாகிவிட்ட ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத் தொடர் போன்ற பயணங்களுக்கு கூட ஜனாதிபதி தனக்கு முகஸ்துதி பாடும் ஒரு கூட்டத்தையும் அழைத்துச் சென்று பெருமளவு பணத்தை வீண் விரயம் செய்துள்ளார்.
இவற்றுக்கு அப்பால் நல்லாட்சி என்று சொல்லப்பட்ட இந்த ஆட்சியில் ஊழலும் மோசடியும் தலை விரித்தாடத் தொடங்கியது. இதனால் இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை கரைந்தோடத் தொடங்கியதோடு மக்கள் தமக்கு துரோகமட இழைக்கப்பட்டு விட்டதாகவும் கருதத் தொடங்கினர். இந்த தேசம் இவ்வாறு அரசியல்
ரீதியாக நோயுற்று கிடந்த ஒர நிலையில் தான் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக மத்திய வங்கி பிணை முறி மோசடியைக் காரணம் காட்டி நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. 

ரணில் விக்கிரமசிங்க அரசியலில் இருந்து விலகுவார் என்றே மக்கள்
எதிர்ப்பார்த்தனர். இந்த எதிர்ப்பார்ப்பில் மக்கள் தான் களைத்துப்
போய்விட்டனர். ஆனால் தார்மிக விழுமியங்களை விட பதவியும் வசதிகளும் தான் கவர்ச்சிமிக்கவையாகத் தென்பட்டன. இவற்றுக்கு மேலாக எந்த விலை கொடுத்தேனும் தங்களது நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றிக் கொள்ள அமெரிக்க ஐரோப்பிய இஸ்ரேல் சக்திகள் ரணில் சிக்கிரமசிங்கவை பதவியில் தக்க வைக்க நடவடிக்கை எடுத்தன. இவற்றின் நடுவே தான் ரணிலுக்கும் மைத்திரிக்கும் இடையிலான முறுகல் நியும் உச்சத்தக்கு வந்தது. இந்த முறுகல் நிலை நாட்டை மேலும் முன்னேற்ற பாதையில் செல்ல விடாமல் தடுத்தது. முக்களின் விரக்தி ஆழமாகிக் கொண்டே போன நிலையில் அரசாங்கம் சகல ஐரோப்பிய யுத்த வெறியர்களுக்கும் இந்த நாட்டின் கதவுகளைத் திறந்து விட்டது.


அமெரிக்காரூபவ் ஐராப்பாரூபவ் இஸ்ரேல் எல்லா யுத்த வெறியர்களும் இங்கே வந்து சேர்ந்தனர். அவர்களின் விளையாட்டுத் திடலாக இந்த நாடு மாறியது. 1979ல் சோவியத் யூனியன் சிதைவடைந்தது முதல் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்ற போர்வையில் அப்கானிஸ்தான்ரூபவ் பொஸ்னியாரூபவ் கொசோவோரூபவ் செச்னியாரூபவ் சோமாலியாரூபவ் ரூடவ்ராக்ரூபவ் விபியாரூபவ் சிரியா தற்போது யெமன் என பல நாடுகளை நாசமாக்கிய இந்த சக்திகள் பத்து மில்லியனுக்கும் அதிகமான மக்களை கொன்று குவித்துள்ளன. 50 மில்லியனுக்கும் அதிகமான மக்களை அடித்து விரட்டியுள்ளன.
அவர்கள் இப்போது பல்Nவுற நாடுகளில் மிக Nhசமான நிலையில் முகாம்களுக்குள் முடங்கிக் கிடக்கின்றனா.
இந்த நாடுகளிடம் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு பொதுவான வேலைத் தி;ட்டம் உள்ளன. இந்தப் பின்னணியில் இவை எமது நாட்டுக்குள்ளும் நுழைந்துள்ளமை இங்கு முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத பதற்றத்தை தூண்டிவிடும் சக்திகளுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்படும் சக்திகளும் இங்கு பிரவேசித்து
தங்களது கிளைகளையும் திறந்துள்ளன. உதாரணத்துக்கு 2002 பெப்ரவரியில குஜராத் மாநிலத்தில் 2000 முஸ்லிம்களைக் கொன்று குவித்த நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சியின் ஆட்சி இந்து பேரினவாத சக்தியான ஆர்எஸ்எஸ் இன் அடையாளச் சின்னமாகத் திகழ்கின்றது. பசுக்களைப் பாதுகாப்போம்

என்ற போர்வையில் முஸ்லிம்களை கொலை செய்வதற்கு தனது கூலிப்படையினருக்கு மோதி பூரண அனுமதி வழங்கி உள்ளார்.
இந்த விஎச்பி அபை;பு வவுனியாவில் கிளை ஒன்றைத் திறஙந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்னும் சில தமிழ் கூலிப்டையினர் மட்டக்களப்பில் இஸ்ரேலிய கொடிகளை ஏந்தியவாறு முஸ்லிம்களுக்கு ஆத்திரமூட்டும் வகையில் ஊர்வலம் சென்றுள்ளனர். அரசியல்வாதிகள்ரூபவ் ஊடகவியலாளர்கள்ரூபவ் புத்திஜீவிகள் உற்பட
சமூகத்தின் பல்வேநு தரப்பினரையும் முஸ்லிமக்ளுக்க எதிராக மூளைச்சலவை செய்யும் பணியையும் இவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

ஒரு காலத்தில் இந்த நாட்டில் இருந்து வெளியெற்றப்பட்ட இஸ்ரேல் இப்போது மீண்டும் சகல வசதிகளுடனும் இங்கு வந்துள்ளது. இன்று அவர்கள் சிங்கள புத்தி ஜீவி சமூகம் உற்பட எல்லா பிரிவுகளிலும் ஊடுறுவி உள்ளனர். ஆதன் கொலைகார இயந்திரமான மொஸாட் பற்றிய ஒரு நூலை சிங்களத்தில் மொழிபெயர்த்தும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். 2018 அக்டோபர் 31ல் இடம்பெற்ற ஒரு ஊடக சந்திப்பில் உரை நிகழ்த்திய சிரேஷ்ட சட்ட விரிவுரையாளர் ராஜா குணரத்ன ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பதவிக்கு கொண்டு வருவதில் தமது நிகழ்ச்சி நிரலை இலங்கையில் நிறைவேற்றத் துடிக்கும் வெளிநாடுகளின் சதி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். சாவதேச நிகழ்ச்சி

நிரலின் விருப்பு வெறுப்புக்கு எற்பவே ரணில் விக்கிரமசிங்க
பணியாற்றினார். ஆதன் மூலம் அவர் இலங்கையை மோசமான நிலைக்குத் தள்ளினார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான குழப்பகரமான ஒரு அரசியல் பின்னணியில் தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மோசமான ஆட்சிரூபவ் ஊழல் மோசடிரூபவ் அள்கடத்தல்ரூபவ் கொலைரூபவ்
கொள்ளைரூபவ் அச்சுறுத்தல் என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ள மனித உரிமை முpறல் குற்றங்களைப் புரிந்தள்ளதாக குற்றச்சாட்டுக்கள் உள்ள மகிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்து முழு நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். புpரதம மந்திரியாக ரணில் பதவி வகிக்கின்ற நிலையிலேயெ அவர் இதைச் செயதுள்ளார். 

புதிய பிரதமர் நியமனமாகி முழுமையாக புதிய அமைச்சர்கள் நியமனமாவதற்கு மன்ரேயே முதல் காரியமாக மஹதசொன் பலகாய தலைவர் அமித் வீரசிங்கவும் அவரது சகாக்கள் ஒன்பது பேரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும்
கணடியில் திகண பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீதான வன்முறைகளுக்கு காரணமாக இருந்தவர்கள். ஆமித்தை வெளியில் இருந்த அவரது சகாக்கள் தோளில் சுமந்து அமோக வரவேற்பு அளித்துள்ளனர். இந்த விடுதலை மூலம் முஸ்லிம் சமூகத்துக்கு விடுக்கப்பட்டுள்ள செய்தி என்ன என்பது தான் இன்றைய முக்கிய கேள்வி.

இந்த நாட்டின் இன்றைய ரெசியல் குழப்ப நிலை இந்திழயாவால் அரங்கேற்றப்பட்ட ஒரு நாடகம் என்ற வலுவான சந்தேகம் சகல மக்கள் மத்தியிலும் உள்ளது. ராஜ்ய சபா உறுப்பினர் சுப்பிரமணிய சுவாமியின் அண்மைய இலங்கை விஜயம் மகிந்த ராஜபக்ஷ நாமல் ராஜபக்ஷவுடன்; அண்மையில் மேற்கொண்டரூபவ் இந்திய விஜயம் நரேந்திர
மோடியுடனான சந்திப்பு என்பனவற்றின் தொடராகவே இந்தக் குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மகிந்த ராஜபக்ஷ ஒரு உறுதியான தேசிய வாதி. அவருடனான சிறந்த நற்பின் மூலம் இந்தியா பல நன்மைகளைப் பெறும். எனவே இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது என
சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். 

குற்றங்களிலும் ஊழல் மோசடிகளிலும் ரூடவ்டுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கவே மக்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆணை வழங்கினர். ஆனால் இன்று இந்த ஆணையை அவர் மீறி உள்ளார். குற்றங்களுக்காக யாரை சட்டத்துக்கு மன் நிறுத்துவேன் என்று அவர் இந்த நாட்டு மக்களுக்கு வாக்களித்தாரோ இன்று அதே
நபர்களை அவர் அரியாசனத்தில் அமர்த்தி உள்ளார். இலங்கை இயற்கை எழில் கொஞ்சும் ஒரு சொர்க்க பூமி. 1948ல் சுதந்திரம் அடைந்த வேளையில் அது பெரும்பாலும் அபிவிருத்தி அடைந்த ஒரு நாடாகவே

காணப்பட்டது. குல்வி அறிவுள்ள மக்கள்ரூபவ் ஒருமைப்பாடுரூபவ் அரசியல் ஸ்திரத்தன்மைரூபவ் உறுதியான பொருளாதாரம்ரூபவ் வெளிநாட்டு நாணயமாற்று ஒதுக்குரூபவ் இன ஒற்றுமைரூபவ் நல்லிணக்கம் என எல்லாமே இருந்தது. இவற்றகை; கொண்டு இந்த நாட்டை அபிவிருத்தி அடைந்த ஒரு நாடாக மக்கள் மேலும் செழிப்பாக நிம்மதியாக வாழக்கூடிய ஒர நாடாக இதை ஆக்கியிருக்கலாம்.
ஆனால் அதை விடுத்து இனவாத அரசியல் இங்கெ தலையெடுத்தது. ஊழல் தலைவிரித்தாடியது. 

இவற்றின் விளைவாக உலகில் மிக மோசமாக நிர்வகிக்கப்பட்ட ஒரு நாடு என்ற பட்டியலில் இந்த நாடு சேர்ந்தது. இவற்றின் விளைவாக மக்களே துன்பப்பட்டனர். இங்கிருந்து இனி எங்கு செல்வது என்பததான் இன pஉள்ள முக்கிய கேள்வி. தார்மிக விழுமியங்களையும் சமயக் கொள்கைகளையும் மதிக்க் கூடிய ஒரு மூன்றாவது சக்தி பெரும்பான்மை சமூகத்தில் இருந்து உருவாகுமா? ஆந்த சக்தி ஐக்கிய தேசியக் கட்சியினதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் பிடியில் இருந்து இந்த நாட்டை விடுவிக்குமாரூபவ் இவை தான் இன்று மக்கள் மத்தியில் எழுந்துள்ள வினாக்கள். முக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மைத்திரியும் ரணிலும் நிறைவேற்றத் தவறியதால் இன்று இருவருமே தமது அரசியல் முக்கியத்துவத்தை  ழந்து விட்டனர். இதனால் தான் மூன்றாம் தரப்பொன்றின் தேவையை நான் இதற்கு மன்னரும் பல கட்டுரைகளில் வலியுறுத்தி உள்ளேன். (முற்றும்)
தற்போதைய அரசியல் குழப்ப நிலைக்கு மைத்திரியும் ரணிலுமே காரணம் தற்போதைய அரசியல் குழப்ப நிலைக்கு மைத்திரியும் ரணிலுமே காரணம் Reviewed by Vanni Express News on 11/11/2018 11:48:00 PM Rating: 5