haiiii

முதுகெலும்புள்ள அரசியல்வாதிகளை மக்கள் இனம்கான்பார்களா ?

-முகம்மத் இக்பால் சாய்ந்தமருது

பலமுள்ளவன் பலயீனமானவனை அடக்கி ஒடுக்கி ஆதிக்கம் செலுத்துவது மனிதர்களின் இயல்பாகும். இது தனி நபராக மட்டுமல்ல. சமூகங்களுக்கு இடையிலும் இந்த ஆதிக்க வெறி இருந்துகொண்டே இருக்கின்றது.

இலங்கையில் இரண்டாவது சிறுபான்மை சமூகமான முஸ்லிம்கள் தமிழ் ஆயுதக்குழுக்களால் ஒரு குறிப்பிட்ட காலமும், மற்றும் தொடர்ந்து சிங்கள பெரும்பான்மை இனவாதிகளினால் அச்சுறுத்தப்பட்டும், கொலை செய்யப்பட்டும், அகதிகலாக்கப்பட்டும் நிராயுதபாணிகளாக வாழ்கிறோம்.

சிங்கள ஆட்சியாளர்களின் அரசியல் தேவைக்காக முஸ்லிம்கள் அவ்வப்போது பந்தாடப்பட்டுக்கொண்டு வருகின்றார்கள். எதிர்காலத்திலும் அவ்வாறு நடக்கமாட்டாது என்று கூற முடியாது.

தங்களை தாக்குபவர்களுக்கு எதிராக திருப்பி தாக்குவதற்கோ அல்லது தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கோ முஸ்லிம்களிடம் எந்தவித பலமும் இல்லை.

மாறாக புறமுதுகு காட்டி ஓடுவதும், பின்பு தாக்கியவர்களிடமே பாதுகாப்பு தேடும் கேவலமானதும், கோழைத்தனமானதுமான நிலைமை முஸ்லிம்களிடம் காணப்படுகின்றது. எதிர்காலத்திலும் இந்த நிலைமையில் மாற்றம் வரக்கூடிய சாத்தியங்கள் இல்லை.

குறைந்தது எதிரிகளிடமிருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்கான எதிர்கால திட்டங்கலாவது எங்களிடம் இல்லை.

சாதாரண முஸ்லிம் மக்களைவிட, மக்களை வழிநடாத்துகின்ற அரசியல்வாதிகளிடமே அதிகமான கோழைத்தனங்கள் காணப்படுகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள இன்றைய அரசியல் சூழ்நிலையில், மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று கூறுகின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளும் இருக்கின்றார்கள்.

மகிந்தவின் ஆட்சியில் முஸ்லிம் மக்கள் அடைந்த துன்பங்கள் ஏராளம். அவைகளை முஸ்லிம் மக்கள் மறந்துவிடவில்லை. ஆனால் மகிந்தவின் ஆட்சி உறுதி செய்யப்பட்டால், அவரை எதிர்த்து சமூகத்துக்காக அரசியல் செய்வதற்கு திராணியற்ற கோழைகளின் நிலைப்பாடே இந்த மகிந்த புராணமாகும்.

இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சிக்குட்பட்டு கௌரவமானதும், பாதுகாப்பானதுமான சமூகமாக வாழ வேண்டும் என்று முஸ்லிம் மக்கள் விரும்புகின்றார்கள்.

ஆனால் சில அரசியல்வாதிகளோ அந்த நிலைப்பாட்டில் இல்லை. அதாவது யார் எப்படிப்போனால் என்ன ? சமூகம் எக்கேடு கெட்டால் என்ன ? தனது சொந்த அரசியலை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.

அதற்காக எந்த பேய் ஆட்சி செய்தாலும் பருவாயில்லை. தாங்கள் தொடர்ந்து அரசியல் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புகினார்கள்.

எனவே இவ்வாறு சந்தர்ப்பத்துக்கு காய் நகர்த்துகின்ற அரசியல்வாதிகளை இனம் கண்டு எதிர்வரும் காலங்களில் இவர்களை ஓரம்கட்டுவதோடு, உயிரை துச்சமென மதித்து சமூகத்துக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றவர்களை மக்களும், தலைமையும் இனம் காணவேண்டும். அப்போதுதான் முதுகெலும்புள்ள சமூகமாக இந்த நாட்டில் வாழ முடியும்.
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,16,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,148,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3250,விளையாட்டு,727,வினோதம்,159,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,
ltr
item
Vanni Express News: முதுகெலும்புள்ள அரசியல்வாதிகளை மக்கள் இனம்கான்பார்களா ?
முதுகெலும்புள்ள அரசியல்வாதிகளை மக்கள் இனம்கான்பார்களா ?
https://2.bp.blogspot.com/-fuuTA72ZGsk/W-HWsWxE-_I/AAAAAAABRGQ/tmT9GXrCZWAz61PHDMjpbXLRNloFMwlzwCLcBGAs/s640/V.E.N.Media.jpg
https://2.bp.blogspot.com/-fuuTA72ZGsk/W-HWsWxE-_I/AAAAAAABRGQ/tmT9GXrCZWAz61PHDMjpbXLRNloFMwlzwCLcBGAs/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2018/11/article_99.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2018/11/article_99.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy