haiiii

உடல் பருமனுக்கும், புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு என்ன ?

உடல் பருமன் அதிகமுடையவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதற்கான காரணத்தை விளக்கும் ஆய்வை நிறைவு செய்துள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

உடலில் உருவாகும் புற்றுநோய் திசுக்களை எதிர்த்து சண்டையிட்டு முறியடிக்கும் ஒருவித செல்கள், உடல் பருமன் அதிகமுள்ளவர்களின் உடல், கொழுப்புகளால் அடைக்கப்படுவதால், அவற்றின் செயல்பாடு நின்று புற்றுநோய் ஏற்படுவதாக அயர்லாந்தின் டிரினிட்டி கல்லூரியை சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

பிரிட்டனில் புற்றுநோயை உண்டாக்கும், அதேவேளையில் தடுக்கும் வாய்ப்புள்ள புற்றுநோய்க்கான காரணிகளில் புகைப்பழக்கத்தை அடுத்து உடல்பருமன் இரண்டாவது இடத்தை வகிப்பதாக அந்நாட்டின் கேன்சர் ரிசர்ச் என்ற அமைப்பை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 

பிரிட்டனில் புற்றுநோய் தாக்கும் 20 பேரில் ஒருவர் அல்லது ஓராண்டுக்கு 22,800 பேருக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணமாக அதிகப்படியான உடல் பருமன் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 

உடலில் பெரும்பகுதியை கொழுப்பு அடைத்துகொண்ட பிறகு அது உடலிலுள்ள செல்களுக்கு சமிக்ஞைகளை அனுப்பி, புற்றுநோயை உண்டாக்குவதாகவும், புற்றுநோய் அணுக்களை அதிகரிப்பதாகவும் ஆய்வாளர்கள் ஏற்கனவே சந்தேகித்திருந்தார்கள். 

இந்நிலையில், உடல்பருமன் அதிகமுள்ளவர்களின் கொழுப்பு எவ்வாறு புற்றுநோய் எதிர்ப்பு அணுக்களின் செயல்பாட்டை பாதிக்கிறது என்பதை டிரினிட்டி கல்லூரி விஞ்ஞானிகள் ´நேச்சர் இம்முனோலஜி´ என்ற சஞ்சிகையில் விளக்கியுள்ளனர். 

ஒவ்வொருவரின் உடலிலும் இயற்கையாக அமைந்துள்ள புற்றுநோய் எதிர்ப்பு அணுக்களை அதை பாதிக்கும் கொழுப்புகளிடமிருந்து காப்பாற்றி அவற்றை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவரும் மருந்துகளை உருவாக்க முடியுமென்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். 

"இயற்கையான புற்றுநோய் எதிர்ப்பு அணுக்களை சூழ்ந்திருக்கும் கொழுப்பை நீக்கும் சேர்மத்தை பரிசோதித்து பார்த்தோம். நாங்கள் எண்ணியவாறே அதை முற்றிலும் அழிக்க முடிந்தது," என்று பேராசிரியர் லிடியா லிஞ்ச் கூறுகிறார். 

"புற்றுநோய் அணுக்களை சூழ்ந்திருக்கும் கொழுப்பை நீக்குவதற்கு மருந்துகளை பயன்படுத்துவதைவிட உடல் எடையை குறைப்பது மற்ற பிரச்சனைகளில் சிக்காமல் இருப்பதற்கு உதவும் சிறந்த வழி," என்று அவர் மேலும் கூறுகிறார். 

"13 வகையான புற்றுநோய் ஏற்பட உடல் பருமனே காரணமாக உள்ளது என்று நமக்கு தெரிந்தாலும், உடல் பருமனுக்கும், புற்றுநோய்க்கும் இடையிலான நுட்பம் குறித்து இதுவரை தெளிவான பதில்கள் கிடைக்கவில்லை," என்று பிரிட்டனின் கேன்சர் ரிசர்ச் அமைப்பை சேர்ந்த மருத்துவர் லியோ கார்லின் கூறுகிறார். 

"கொழுப்பு மூலக்கூறுகள் எவ்வாறு நோயெதிர்ப்பு அணுக்களை தனது புற்றுநோய் தடுப்பு செயல்பாட்டை மேற்கொள்ள விடாமல் தடைசெய்கிறது என்பதையும், அந்த பிரச்சனையை சமாளிப்பதற்கான புதிய வழிவகைகளையும் இந்த ஆராய்ச்சி வழங்குகிறது" என்று அவர் மேலும் கூறுகிறார். 

உலகில் ஏற்படும் உயிரிழப்புகளில் ஆறில் ஒன்றுக்கு காரணம் புற்றுநோய் என்று கூறுகிறது உலக சுகாதார நிறுவனம். 

புற்றுநோய் உண்டாவதற்கான கீழ்க்காணும் ஐந்து முக்கிய காரணிகளை அந்த அமைப்பு பட்டியலிடுகிறது. 

புகையிலைப் பொருட்களை உட்கொள்வது
மது அருந்தும் பழக்கம்
அதிக உடல் எடையுடன் இருப்பது
குறைந்த அளவில் பழங்களையும் காய்கறிகளையும் உட்கொள்வது
உடல் உழைப்பு இல்லாமை


மேற்கண்டவற்றில் அதிகம் பேருக்கு புற்றுநோய் வரக் காரணமாக இருப்பது புகையிலைப் பழக்கம்தான். உலக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் 22% பேரின் பாதிப்புக்கு காரணமாக இருப்பது புகையிலை மட்டுமே. அது புகைப் பிடித்தல் மட்டுமல்ல. வேறு எந்த வகையில் புகையிலைப் பொருட்களை உட்கொண்டாலும் புற்றுநோய் வர வாய்ப்புண்டு. 

உலகில் ஆறு நொடிக்கு ஒரு நபரின் மரணத்துக்கு காரணமாக இருப்பது புகையிலையால் உண்டாகும் நோய்களே என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

புற்றுநோய் பல உறுப்புகளில் வந்தாலும் நுரையீரல், கல்லீரல், பெருங்குடல், வயிறு மற்றும் மார்பகம் ஆகிய உறுப்புகளிலேயே பெரும்பாலும் புற்றுநோய் உண்டாகிறது.
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,17,video,6,அரசியல்,4836,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,16,உள்நாட்டு செய்திகள்,11096,கட்டுரைகள்,1388,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,148,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3244,விளையாட்டு,727,வினோதம்,159,வெளிநாட்டு செய்திகள்,2076,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,
ltr
item
Vanni Express News: உடல் பருமனுக்கும், புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு என்ன ?
உடல் பருமனுக்கும், புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு என்ன ?
https://3.bp.blogspot.com/-yODmkl4t-jU/W_Gp9R9jHJI/AAAAAAABRcM/NtRpCnJdExMxPH4c4YtXjO1Man3EZh9bgCLcBGAs/s640/V.E.N.Media.jpg
https://3.bp.blogspot.com/-yODmkl4t-jU/W_Gp9R9jHJI/AAAAAAABRcM/NtRpCnJdExMxPH4c4YtXjO1Man3EZh9bgCLcBGAs/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2018/11/cancer.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2018/11/cancer.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy