வவுனியா பட்டக்காடு குளத்தில் குளிக்கச் சென்ற 14 வயதுச் சிறுவன் உயிழப்பு

-வவுனியா நிருபர் சசி 

வவுனியா பட்டக்காடு குளத்திற்கு குளிப்பதற்கு இன்று பிற்பகல் சிறுவர்களுடன் சென்ற திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த 14வயது சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் இன்று பிற்பகல் 4 மணியளவில் திருநாவற்குளம் பகுதியிலிருந்து அருகிலுள்ள பட்டக்காட்டு குளத்தில் குளிப்பதற்காக சிறுவர்களுடன் சென்று குளத்தில் குளித்துக்கொண்டிருந்தபோது குறித்த சிறுவன் தண்ணீரின் ஆழத்திற்குச் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. 

இதையடுத்து ஏனைய சிறுவர்கள் திருநாவற்குளம் பகுதியில் நின்ற இளைஞர்களுக்கு நடந்த விடயங்களை தெரியப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் இளைஞர்கள் குளத்திற்குள் சென்று நீச்சல் அடித்து நீரின் அடிமட்டத்திலிருந்த குறித்த சுரேஸ்குமார் றோசான் 14வயதுடைய சிறுவனை 15நிமிடங்கள் போராட்டத்தின் பின்னர் மீட்டு வைத்தியசாலைக்கு மோட்டார் சைக்கிளில் எடுத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் வைத்தியர்கள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது எடுத்துவரும் வழியில் குறித்த சிறுவன் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வைத்தியசாலைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா பட்டக்காடு குளத்தில் குளிக்கச் சென்ற 14 வயதுச் சிறுவன் உயிழப்பு வவுனியா பட்டக்காடு குளத்தில் குளிக்கச் சென்ற 14 வயதுச் சிறுவன் உயிழப்பு Reviewed by Vanni Express News on 11/15/2018 11:45:00 PM Rating: 5