ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்தார் திலக்கரத்ன டில்ஷான்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலக்கரத்ன டில்ஷான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கான அங்கத்துவத்தினை பெற்றுக்கொண்டுள்ளார். 

1999 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை திலக்கரத்ன டில்ஷான் இலங்கை கிரிக்கெட் அணிக்காக விளையாடினார். 

2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் 2016 செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி ரி 20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் திலக்கரத்ன டில்ஷான் ஓய்வு பெற்றார். 

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன ஆகியோரை தேர்தல் பிரசாரங்களில் கலந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்புக்கு அவர்கள் மறுப்பு வெளியிட்டுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்தார் திலக்கரத்ன டில்ஷான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்தார் திலக்கரத்ன டில்ஷான் Reviewed by Vanni Express News on 11/14/2018 11:05:00 PM Rating: 5