உதைப் பந்தாட்டத்துறை மேம்படுத்தப்படும் - அமைச்சர் பைஸர் முஸ்தபா

-மினுவாங்கொடை நிருபர் - ஐ. ஏ. காதிர் கான்

இலங்கை உதைப் பந்தாட்ட சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழுவினர், விளையாட்டுத்துறை அமைச்சில் வைத்து, கடந்த (08) வியாழக்கிழமை மாலை, அமைச்சர் பைஸர் முஸ்தபாவைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது, ஆசிய உதைப் பந்தாட்ட சம்மேளனத்தின் சட்ட திருத்தம் தொடர்பில் வாக்களிக்கும் முறைமைகள் குறித்து விரிவாக ஆராய்ப்படது. அத்துடன், அவர்களின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டன. இங்கு அமைச்சர் பைஸர் முஸ்தபா, சம்மேளன உறுப்பினர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும்போது, விளையாட்டுத்துறை அமைச்சர் என்றவகையில், முதலில் நான் நாட்டைப் பற்றியே சிந்தித்து வருகின்றேன். உதைப் பந்தாட்ட விளையாட்டுக்கு பொறுப்பு வாய்ந்த சங்கம் என்ற வகையில், உதைப் பந்தாட்ட விளையாட்டின் சட்டத்திருத்தம் தொடர்பிலான தீர்மானம், அவர்களையே சாரும். 

இதற்கான சிறந்த முடிவுகளை எடுப்பதும், அவர்களின் கைகளிலேயே தங்கியுள்ளதுடன், இதற்கான பொறுப்பும் அவர்களிடமே உள்ளது.

உதைப் பந்தாட்ட விளையாட்டின் எதிர்கால முன்னேற்றங்கள் குறித்து, இலங்கை உதைப் பந்தாட்ட சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழு கலந்துரையாடல்களை நடத்தி, சரியான தீர்மானங்களை எடுப்பார்கள் என்பது எனது நம்பிக்கையாகும் என்றார்.
உதைப் பந்தாட்டத்துறை மேம்படுத்தப்படும் - அமைச்சர் பைஸர் முஸ்தபா உதைப் பந்தாட்டத்துறை மேம்படுத்தப்படும் - அமைச்சர் பைஸர் முஸ்தபா Reviewed by Vanni Express News on 11/09/2018 05:32:00 PM Rating: 5