பேருந்தில் தீபிடித்த விபத்தில் 42 பேர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்

சிம்பாப்வே நாட்டின் மிட்லான்ட்ஸ் மாகாணத்திற்கு உட்பட்ட ஸ்விஷாவானே பகுதியில் இருந்து தென்னாப்பிரிக்காவில் உள்ள முசினா என்ற பகுதியை நோக்கி சுமார் 70 பேர் ஒரு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். 

புலாவயோ- பெய்ட்பிரிட்ஜ் வீதி வழியாக நேற்றிரவு சென்றபோது அந்த பேருந்து திடீரென்று தீபிடித்து எரிய துவங்கியது. ஓடும் பேருந்தில் ஏற்பட்ட இந்த விபத்தில் சிக்கிய 42 பேர் உயிரிழந்தனர். 

20 க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

இதே மாகாணத்தில் உள்ள ருசாப்பே என்னுமிடத்தில் கடந்த வாரம் இரு பேருந்துகள் மோதிகொண்ட விபத்தில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பேருந்தில் தீபிடித்த விபத்தில் 42 பேர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் பேருந்தில் தீபிடித்த விபத்தில் 42 பேர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் Reviewed by Vanni Express News on 11/18/2018 01:27:00 AM Rating: 5