சுற்றுலாப் பயணிகளின் நலன்கருதி கொழும்பு நோக்கி விசேட விமான சேவை

சுவிஸர்லாந்தைச் சேர்ந்த எடெல் வைஸ் விமான சேவைகள் நிறுவனம் கொழும்பு நோக்கி விசேட விமான சேவையை நடத்த உள்ளது. 

இந்த நிறுவனம் சுவிஸ் இன்டர்நெஷனல் எயார்லைன்சிற்குச் சொந்தமானதாகும். 

இது பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கும், ஏனைய கண்டங்களில் உள்ள நகரங்களுக்கும் விமான சேவைகளை நடத்தி வருகிறது. 

பருவகாலத்தில் இலங்கையை நாடும் சுற்றுலாப் பயணிகளின் நலன்கருதி, எதிர்வரும் ஜனவரி மாதம் வரை விசேட சேவைகளை நடத்தப் போவதாக எடெல் வைஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் நலன்கருதி கொழும்பு நோக்கி விசேட விமான சேவை சுற்றுலாப் பயணிகளின் நலன்கருதி கொழும்பு நோக்கி விசேட விமான சேவை Reviewed by Vanni Express News on 11/08/2018 10:53:00 PM Rating: 5