கோட்டாபய வெளிநாடு செல்ல தற்காலிக அனுமதி

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை எதிர்வரும் டிசம்பர் 14 ஆம் திகதி முதல் ஒரு மாத காலம் வரையில் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் அவர் இன்று விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். 

இதன்போது அவருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டாபய வெளிநாடு செல்ல தற்காலிக அனுமதி கோட்டாபய வெளிநாடு செல்ல தற்காலிக அனுமதி Reviewed by Vanni Express News on 11/09/2018 05:08:00 PM Rating: 5