Hot News - பாராளுமன்றம் கலைப்பு - உச்சநீதிமன்றம் செல்லும் ரணில்

நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்னரே ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்துள்ளார்.


225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில், மகிந்த ராஜபட்ச பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிற்கு அவருக்கு எம்.பிக்கள் இல்லை என்பதால் இந்த முடிவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ளதாக தெரிகிறது. 

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து புதிய தேர்தல் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி நடத்தப்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. 

இந்த பாராளுமன்றத்திற்கான பதவிக்காலம் முடிவடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே கலைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள உத்தரவு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக ரணில் விக்கிரமசிங்கே தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
Hot News - பாராளுமன்றம் கலைப்பு - உச்சநீதிமன்றம் செல்லும் ரணில் Hot News - பாராளுமன்றம் கலைப்பு - உச்சநீதிமன்றம் செல்லும் ரணில் Reviewed by Vanni Express News on 11/10/2018 01:00:00 AM Rating: 5