இலங்கைக்கு சர்வதேசத்தில் உள்ள நற்பெயர் மிக வேகமாக சரிவடைந்துள்ளது

கடந்த 26ம் திகதி ஜனாதிபதியால் எடுக்கப்பட்ட தீர்மானம் காரணமாக நாடு நெருக்கடியை எதிர் கொண்டுள்ளதாகவும், பொருளாதாரம், மக்கள் வாழ்க்கை இலங்கைக்கு சர்வதேசத்தில் உள்ள நற்பெயர் என்பன மிக வேகமாக சரிவடைந்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார். 

சபாநாயகர் கரு ஜயசூரியவினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பதில் கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அந்தக் கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, நேற்று பாராளுமன்றத்தில் 122 உறுப்பினர்கள் இணைந்து தீர்மானித்த யோசனையை உங்களால் சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். 

நீங்கள் கடந்த 26ம் திகதி எடுத்த தீர்மானம் காரணமாக நாடு மிகுந்த நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

நீண்ட கால அரசியல் வாழ்க்கையில், தனிப்பட்ட முறையில் தாங்கள் உழைத்த நற்பெயரும் கௌரவமும், மிக வேகமாக சரிவடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காலம் தாமதிக்காமல் பெரும்பான்மை பலத்துக்கு செவி சாய்த்து நாட்டை இந்த நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பிரஜைகள் சார்பிலும் கேட்டுக் கொள்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
இலங்கைக்கு சர்வதேசத்தில் உள்ள நற்பெயர் மிக வேகமாக சரிவடைந்துள்ளது இலங்கைக்கு சர்வதேசத்தில் உள்ள நற்பெயர் மிக வேகமாக சரிவடைந்துள்ளது Reviewed by Vanni Express News on 11/15/2018 03:13:00 PM Rating: 5