மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவிக்கு எதிராக மற்றொரு மனுத் தாக்கல்

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமையானது சட்டத்துக்கு எதிரானது என்று உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

தம்பர அமில தேரர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். 

மனுவில் பிரதிவாதிகளாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட 53 பேர் பெயரிடப்பட்டுள்ளனர். 

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானம் 19வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிரானது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக ஜனாதிபதியின் இந்த செயற்பாடு தமது அடிப்படைய உரிமையை மீறி இருப்பதாக உத்தரவிடுமாறு மனுதாரர் நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவிக்கு எதிராக மற்றொரு மனுத் தாக்கல் மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவிக்கு எதிராக மற்றொரு மனுத் தாக்கல் Reviewed by Vanni Express News on 11/28/2018 06:01:00 PM Rating: 5