மரியாதை இருக்குமானால் கொள்ளைக்கார ஆட்சி வெளியேற வேண்டும் - மனோ கணேஷன்

ஜனநாயகம் தொடர்பில் துளி அளவேனும் மரியாதை இருக்குமானால் கொள்ளைக்கார ஆட்சி வெளியேற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் இன்று (14) கட்சித் தலைவர்கள் பங்கேற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 122 பேர் பெரும்பான்மையை சிறப்பான, பண்பான மற்றும் முறையான விதத்தில் வெளிப்படுத்தி இருந்ததனர். 

மஹிந்த ராஜபக்ஷ தொடர்ச்சியாக தேசபக்தி, தேசியம் மற்றும் நாட்டு மக்கள் தொடர்பில் எங்களுக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருக்கின்றார். 

தேசபக்தி, தேசியம், நாடு என்பன எல்லாம் அடிப்படை சட்டமான அரசியலமைப்பை கொண்டு தான் இருக்கின்றது. 

ஆகவே அந்த அரசியலமைப்பை மதிக்க தெரியவேண்டும். அவ்வாறு அரசியலமைப்பை மதிக்காது எங்களுக்கு வகுப்பெடுக்க முயற்சிக்க கூடாது. 

மீண்டும் எங்களது ஆட்சி சட்டபூர்வமாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. 

எனவே அதற்கு ஜனநாயக ரீதியாக ஒத்துழைப்பு வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மரியாதை இருக்குமானால் கொள்ளைக்கார ஆட்சி வெளியேற வேண்டும் - மனோ கணேஷன் மரியாதை இருக்குமானால் கொள்ளைக்கார ஆட்சி வெளியேற வேண்டும் - மனோ கணேஷன் Reviewed by Vanni Express News on 11/14/2018 10:56:00 PM Rating: 5