சந்திரிக்கா - நரேந்திர மோடிக்குமிடையில் சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாணதுங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையில்சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

மாலைதீவு புதிய ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட்டின் பதவியேற்புநிகழ்வில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காபண்டாரநாயக்க குமாணதுங்க மாலைதீவிற்கு விஜயம் செய்துள்ளார்.

சந்திரிக்காவை மாலைதீவின் முன்னாள் பிரதமர் மொஹமட் நஷீட் விமான நிலையத்தில் வைத்து வரவேற்றிருந்தார்.

இதன்போதே பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்க வருகைதந்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திரிக்கா சந்தித்துகலந்துரையாடியுள்ளார்.

இந்நிகழ்வில் அமைச்சர் பைசல் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
சந்திரிக்கா - நரேந்திர மோடிக்குமிடையில் சந்திப்பு சந்திரிக்கா - நரேந்திர மோடிக்குமிடையில் சந்திப்பு Reviewed by Vanni Express News on 11/18/2018 01:37:00 AM Rating: 5