நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டுவாருங்கள் - நளின் பண்டார

பாராளுமன்றம் எதிர்வரும் திங்கட்கிழமை கூடும்போது முடியுமானால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

சபாநாயகரின் நடவடிக்கைகளில் திருப்தியடையாதிருந்தால் அல்லது அவரின் மீது அதிருப்தி கொண்டிருந்தால் முடியுமானால் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டுவாருங்கள்  எனவும் நளின் பண்டார மேலும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குப் பதிலாக வாக்கெடுப்புக்கு விடப்படும் தீர்மானம் ஒன்றை எதிர்வரும் திங்கட்கிழமை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 
நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டுவாருங்கள் - நளின் பண்டார நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டுவாருங்கள் - நளின் பண்டார Reviewed by Vanni Express News on 11/18/2018 01:48:00 AM Rating: 5