உடனடியாக பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதே அனைவரினதும் எதிர்ப்பார்ப்பாகும்

உடனடியாக பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதே அனைவரினதும் எதிர்ப்பார்ப்பாகும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

வழக்கு ஒன்று தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு வருகை தந்த போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் உறுப்பினராக தான் தயாராக இல்லை எனவும் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழப்பம் அடைவது பிணைமுறை பணத்தின் பங்குகள் அவர்களுக்கும் கிடைத்துள்ளதினாலா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இன்றைய காமினி செனரத்தின் வழக்கு விசாரணையின் போது லிட்ரோ கேஸ் நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்ற தனிப்பட்டவர்களில் வெளியிடப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

எங்களை திருடன் என்று சொல்லி விட்டு எங்கள் கழிப்பறை குழியை தோண்டும் ரணில் விக்ரமசிங்கவின் உண்மை நிலையை நாட்டிற்கு வெளிக்காட்ட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 
உடனடியாக பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதே அனைவரினதும் எதிர்ப்பார்ப்பாகும் உடனடியாக பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதே அனைவரினதும் எதிர்ப்பார்ப்பாகும் Reviewed by Vanni Express News on 11/30/2018 05:51:00 PM Rating: 5