பாராளுமன்றம் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

பாராளுமன்றம் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி காலை 10.30 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார். 

இன்று காலை 10.30 மணிக்கு கூடிய பாராளுமன்ற கூட்டத் தொடரில் அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்க நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டது. 

அதன் பின்னர் பாராளுமன்றத்தை பிற்போடுவதாக சபாநாயகர் அறிவித்தார். 

இதேவேளை இன்றைய பாராளுமன்ற அமர்விலும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றம் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு பாராளுமன்றம் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு Reviewed by Vanni Express News on 11/30/2018 06:08:00 PM Rating: 5