வெயில் காலத்தில் மரத்தடியிலும் மழை ஒழுக்கிலும் வாழும் விதவை தாய்க்கு உதவுங்கள்.

முதலில் நான் பதிவிட்டுள்ள படங்களை பாருங்கள். இந்த மாதிரியான கொட்டகைக்குள் நம்மால் எத்தனை நாட்கள் வாழ முடியும்.

இவ்வாறு  வறுமை வாழ்ந்து உயர்ந்தவர்களுக்கு அதனை இலகுவாக உணர முடியும். என்பதுடன்  இவ்வாறு வாழாதவர்களும் நீங்கள் வாழும் நல்வாழ்வை நினைத்து இறைவனுக்கு நன்றி சொல்லி முழுமையாக வாசியுங்கள்.

வவுனியா மாவட்டம் செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட  கிராமமொன்றில் வாழும் குடும்பம் ஒன்றின் வீடே இது.

கணவன் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த நிலையில் இரண்டு பெண் பிள்ளைகளையும் வீட்டுத் திட்டத்தில் கிடைக்கபெற்ற ஆசையுடன் கட்டிய வீட்டையும் இருந்த சொத்துக்கள் எல்லாவற்றையும் கொடுத்து திருமணம் முடித்து கொடுத்துவிட்டு தனது 16வயது மகனுடன் கடந்த 6 வருடங்களாக இங்குதான் வாழ்ந்து வருகின்றார்கள்.

தனது 16 வயது மகன் கூலி வேலை செய்து கொண்டுவரும் பணத்தில் தமது அன்றாட வாழ்வை மிகவும் கஸ்டத்துடன் கொண்டு செல்கின்றனர்.

அரசாங்கத்தின் எந்த சலுகையும் கிடைக்காத நிலையில் முன்னர் வீட்டுத் திட்டத்தில் வீடு வழங்கப்பட்டதாலும் இனி வீடு கிடைக்கப்பெறாத நிலையும் காணப்படுகிறது.

குறித்த கொட்டகை மழைக் காலத்தில் ஒலுக்குகளூடாக நீர் வடிவதால் மழைக்காலத்தில் தூக்கமின்றி அமர்ந்திருப்பதாகவும் வெயில் காலத்தில் மரத்தடியில் தமது காலத்தை கழிப்பதாகவும் அந்த தாய் கூறினார்.

நான் அங்கு செல்லும்போது மழை வருவதற்காக கொழுந்து விட்டு எறியும் வெயில் பகல் நேரம் என்பதால் அவர்களது  வீட்டின் உள்ளே 5நிமிடங்கள் கூட இருக்க முற்பட்டேன் ஆனாலும் முடியவில்லை அவ்வளவு வெப்பமாக இருந்தது.

வீட்டின் மேலே பனை மற்றும் தென்னை ஓலைகள் போடப்பட்டு இருந்தாலும் அது வெப்பத்தையோ மழையையோ தாக்கு பிடிக்கும் அளவுக்கு இல்லை என்பதை நேரடியாகவே ஒரு சில நிமிடங்களில் உணர முடிந்தது.

அத்துடன் குறித்த தாயும் வேலைக்கு சென்று சேமித்த பணத்தில் 12×12 சதுர அடி அளவிலான அடித்தளமும் போட்டு இருக்கின்றார். ஆனாலும் அந்த அரையை முழுமையான வீடாக மாற்ற பலவருடங்களாக முயன்றும் முடியாமலே போய்விட்டதாகவும் அந்த தாய்  கண்ணீருடன் கூறி முடித்தார்.

நண்பர்களே இப்பொழுது விடையத்துக்கு வருவோம்.

அடித்தளம் இட்டுள்ள ஒரு அரையைக்கொண்ட அந்த வீட்டை நிர்மாணம் செய்து இந்த தாயின் துயர் துடைக்க  அண்ணளவாக இரண்டு இலட்சம் ரூபாய் அளவில் தேவைப்படுகிறது.

முடிந்தவர்கள் நேரடியாக சென்று அந்த குடும்பத்தையும் பார்வையிட்டு பின்னர் அந்த வீட்டை நிர்மாணிக்க உதவுங்கள்.

அல்லது என்னை தொடர்புகொண்டு தகவல்களை உறுதிப்படுத்தி உதவிகள் வழங்கப்படுமானால்  ஒரு கிழமைக்குள் குறித்த வீட்டை நிர்மாணித்து அந்த விதவை தாயின் துயர் துடைக்க முடியும்.

கொடுப்பதை சரியாக கொண்டு சேர்க்கும் பணி என்னுடையதாகும்.

நீங்கள் வழங்கும் 100 ரூபா பணமாக இருந்தாலும் அது சரியாக பயன்படுத்தப்பட்டு அதற்கான பற்றுச்சீட்டுக்கள் மற்றும் புகைப்படங்கள் என்பனவும் அனுப்பி வைக்கப்படும்.

நம்மால் அனைவருக்கும் உதவ முடியாது ஆனாலும் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த தாயின் வறுமையை போக்க உதவ  முடியுமல்லவா.

இறைவன் உங்களுக்கு கொடுத்ததிலிருந்து கொடுத்து இந்த விதவைத்தாயை தலைமையாக கொண்ட குடும்பத்தை வாழவைப்போம்.

மேலதிக தகவல்களை பெற அழையுங்கள்
சர்ஜான் -0774828281

தகவல் பதிவு செய்யப்படும் திகதி 22.11.2018

உங்களால் உதவ முடியாமல் போனாலும் உதவக்கூடிய உங்கள் நண்பர்களுடன் இந்த தகவலை பகிர்ந்து நீங்களும் உதவி செய்யுங்கள்.

நன்றி.
வெயில் காலத்தில் மரத்தடியிலும் மழை ஒழுக்கிலும் வாழும் விதவை தாய்க்கு உதவுங்கள். வெயில் காலத்தில் மரத்தடியிலும் மழை ஒழுக்கிலும் வாழும் விதவை தாய்க்கு உதவுங்கள். Reviewed by Vanni Express News on 11/28/2018 05:16:00 PM Rating: 5