விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் உத்தரவு - கவலையில் ஜனாதிபதி காரணம் இதுதான்

பொதுபல சேன அமைப்பினர் இன்று (19) மகஜர் ஒன்றை வழங்குவதற்காக ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் மேற்கொண்ட விடயம் தொடர்பில் ஜனாதிபதி தனது கவலையை வெளியிட்டுள்ளார். 

அறிக்கை ஒன்றின் ஊடாகவே ஜனாதிபதி தனது கவலையை தெரிவித்துள்ளார். 

அத்துடன் தேரர்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் மேற்கொள்ள உத்தரவிட்டவர்களுக்கு எதிராக உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். 

ஞானசார தேரரின் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் தேரர்களினால் வழங்கப்பட்ட மகஜரை பெற்றுக் கொண்ட ஜனாதிபதி அவ்விடயம் குறித்து தேரர்களுடன் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் உத்தரவு - கவலையில் ஜனாதிபதி காரணம் இதுதான் விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் உத்தரவு - கவலையில் ஜனாதிபதி காரணம் இதுதான் Reviewed by Vanni Express News on 11/19/2018 11:07:00 PM Rating: 5