பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான் இ.தொ.கா. குழுவினர் நேற்று (27) மாலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தனர். 

இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆட்டிகல ஆகியோருடன் தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபா தொடர்பாக கலந்துரையாடபடபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்ரசின் உப தலைவரும் பெறுந்தோட்ட மனிதவள அபிவிருத்தி ஸ்தாபனத்தின் தலைவருமான எஸ்.அருள்சாமி, முன்னாள் ஊவாமாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோர் கலந்து கொண்டனர். 
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் Reviewed by Vanni Express News on 11/28/2018 11:35:00 PM Rating: 5