பல்வேறு சவால்கள் மற்றும் மன வேதனைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டது - ரணில்

கடந்த காலத்தில் தான் பல்வேறு சவால்கள் மற்றும் மன வேதனைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

மேலும் தனக்கு முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்கள், அவமானங்கள், பேச்சுக்கள் என்பனவற்றை மிகவும் நிதானமாகவும் பொறுமையாகவும் முகங்கொடுத்தாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

இன்று நாடு மிகவும் நெருக்கடி மற்றும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாவும் யார் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சு பதவிகளில் செயற்படுகின்றார்கள் அல்லது அரசாங்கம் நடக்கின்றதா, இல்லையா என்பது பிரச்சினையல்ல எனவும் ஜனநாயகத்தை பாதுகாப்பதா இல்லையா என்பதே பிரச்சினையாக உள்ளது எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) ஜனாதிபதி மக்களுக்காக உரையாற்றிய போது தெரிவித்த கருத்துக் தொடர்பில் தனது நிலைப்பாட்டடை தெளிவு படுத்தும் போதே முன்னாள் பிரதமர் இக்கருத்துக்களை தெரிவித்துள்ளார். 

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நியமிக்கப்பட்ட விலை ஜனாதிபதிக்கு மட்டுமே தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

தனது கட்சியின் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை அவர்களது பக்கம் எடுத்து அமைச்சு பதவிகளை வழங்கியதாக ஜனாதிபதி கருத்து வெளியிட்ட காரணத்தால் சாதாரண மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது இருந்த நம்பிக்கை இழக்கப்பட்டு விட்டதாகவும் முன்னாள் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார். 
பல்வேறு சவால்கள் மற்றும் மன வேதனைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டது - ரணில் பல்வேறு சவால்கள் மற்றும் மன வேதனைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டது - ரணில் Reviewed by Vanni Express News on 11/13/2018 01:10:00 PM Rating: 5