தொடர்ந்தும் நான்தான் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

எதிர்வரும் தேர்தல்களிலும் ரணில் விக்ரமசிங்க கட்சியை தலைமை தாங்குவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தற்போதை அரசியல் சூழ்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருக்கு எதிராக பல்வேறு எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டு வருவதனால் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ கட்சியின் தலைமை பதவியை ஏற்றுள்ளதாக சிலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர். 

எவ்வாறாயினும் கட்சியின் தலைமையை சஜித் பிரேமதாஸவிற்கு வழங்குமாறு கோரி கட்சியில் எவ்வித கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

அதனடிப்படையில் தொடர்ந்தும் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவே இருப்பார் என தெரிவிக்கப்படுகின்றத.
தொடர்ந்தும் நான்தான் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் நான்தான் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க Reviewed by Vanni Express News on 11/17/2018 11:56:00 PM Rating: 5