அரசாங்க பணத்தை பிரதமரின் செயலாளரிற்கு பாவிப்பதற்கு எவ்வித அதிகாரமும் இல்லை

பிரதமரின் செயலாளரிற்கு அரசாங்க பணத்தை பாவிப்பதற்கு எவ்வித அதிகாரமும் இல்லை என தெரிவித்து பிரேரணை ஒன்று பாராளுமன்ற பொதுச் செயலாளரிடம் இன்று (19) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணையை இன்று ஒப்படைப்பதாக கட்சித்தலைவர்களின் கூட்டத்தின் போது பாராளமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தார்.

இதேவேளை குறித்த பிரேரணை பாராளுமன்றத்தில் நவம்பர் மாதம் 29 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர்களான நவின் திஸாநாயக்க, ரவி கருணாநாயக்க, ஹெக்டர் அப்புஹாமி, சதுர சேனாரத்ன ஆகியோர் பாராளுமன்ற பொதுச் செயலாளரிடம் ஒப்படைத்தனர்.
அரசாங்க பணத்தை பிரதமரின் செயலாளரிற்கு பாவிப்பதற்கு எவ்வித அதிகாரமும் இல்லை அரசாங்க பணத்தை பிரதமரின் செயலாளரிற்கு பாவிப்பதற்கு எவ்வித அதிகாரமும் இல்லை Reviewed by Vanni Express News on 11/19/2018 11:29:00 PM Rating: 5