மாற்றங்களை ஏற்படுத்தி எதிர்வரும் சவால்களுக்கு முகம்கொடுப்போம் - ரவுப் ஹக்கீம்

நாட்டில் ஜனநாயக ரீதியில் ஒர் அரசாங்கம் அமைந்தால் மாத்திரமே சிறுபான்மை மக்கள்  தொடர்ந்து  எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு  தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை மக்கள் மற்றும் சிறுபான்மை அரசியல் தலைமைத்துவங்கள் இன்று விழிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி நாட்டில் பலமிக்க கட்சியாக காணப்படுகின்றது. கட்சியின் சில மாற்றங்களை ஏற்படுத்தி எதிர்வரும் சவால்களுக்கு  முகம்கொடுப்போம் என்று கட்சியின் தலைமைத்துவத்திற்கு  அறிவித்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளா்.

நாட்லுள்ள ஒரு அரசியல் குழுவின் தேவைகளுக்காக  பெரும்பான்மையான மக்கள் வழங்கிய மக்களாணையினை எவருக்கும்  விட்டுக் கொடுக்க முடியாது ரவுப் ஹக்கீம் எம்.பி. மேலும் கூறியுள்ளார்.

அலரி மாளிகையில் வைத்து அவர் இக்கருத்துக்களை நேற்று குறிப்பிட்டுள்ளார்.
மாற்றங்களை ஏற்படுத்தி எதிர்வரும் சவால்களுக்கு முகம்கொடுப்போம் - ரவுப் ஹக்கீம் மாற்றங்களை ஏற்படுத்தி எதிர்வரும் சவால்களுக்கு முகம்கொடுப்போம் - ரவுப் ஹக்கீம் Reviewed by Vanni Express News on 11/29/2018 12:04:00 AM Rating: 5