தற்போதைய அரசாங்கத்திற்கு 85 உறுப்பினர்கள் கூட இல்லை - சஜித் பிரேமதாச

பாராளுமன்றத்தில் தற்போதைய அரசாங்கத்திற்கு 113 உறுப்பினர்களை விட்டு 85 உறுப்பினர்கள் கூட இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

இன்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இன்று பாராளுமன்றத்தில் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ண ஆகியோர் பெரும்பான்மை இருப்பவர்களுக்கு ஆட்சியை வழங்குமாறு தெரிவித்திருந்தனர். 

இதன் மூலம் மணித்தியாலத்திற்கு மணித்தியாலம் பலர் உண்மையை புரிந்து கொள்வதாகவும் அதனை தற்போதைய பிரதமர் உட்பட அரசாங்கம் மறுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

தனிப்பட்ட ஒருவருக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகள் ஆசை ஏற்பட முடியும் எனவும் இருப்பினும் அந்த பதவிகளை பெற்றுக் கொள்ள சில விதிமுறைகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்திற்கு 85 உறுப்பினர்கள் கூட இல்லை - சஜித் பிரேமதாச தற்போதைய அரசாங்கத்திற்கு 85 உறுப்பினர்கள் கூட இல்லை - சஜித் பிரேமதாச Reviewed by Vanni Express News on 11/29/2018 11:45:00 PM Rating: 5