பாராளுமன்றத்தை குறைந்த தடவைகள் ஒத்திவைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டுமே

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் கோரிக்கைக்கு மதிப்பளித்து இரண்டு நாட்களுக்கு முன்பதாக பாராளுமன்றத்தைக் கூட்ட ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார் என்று நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் பெரும்பான்மையை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. தேவையான சந்தர்ப்பத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார். 

முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்த்தன 7 தடவைகளும், ஆர்.பிரேமதாச நான்கு தடவைகளும், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஐந்துதடவைகளும், மஹிந்த ராஜபக்ஷ ஐந்து தடவைகளும் பாராளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளார்கள். பாராளுமன்றத்தை குறைந்த தடவைகள் ஒத்திவைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டுமே எனவும் அமைச்சர் கூறினார். 

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் வலுவான அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. புதிய பிரதமரின் நியமனம் அரசியல் யாப்பிற்கும் சட்டத்திற்கும் முரண்படுகிறது எனின் ரணில் விக்கிரமசிங்க ஏன் நீதிமன்றத்தை நாடக்கூடாது என்று கேள்வி எழுப்பினார். 

ஐக்கிய தேசியக் கட்சிக்கு அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை மாத்திரமே சமர்ப்பிக்க முடிந்திருக்கின்றது. 

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்படுமாயின் அதனை தோற்கடிப்பதற்கான வல்லமை அரசாங்கத்திற்கு உண்டு என்றும் அவர் கூறினார். 

சபாநாயகர் தமது அரசியல் நோக்கங்களுக்காக தனது பதவியை முறைகேடாகப் பயன்படுத்துவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா கூறினார். 
பாராளுமன்றத்தை குறைந்த தடவைகள் ஒத்திவைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டுமே பாராளுமன்றத்தை குறைந்த தடவைகள் ஒத்திவைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டுமே Reviewed by Vanni Express News on 11/08/2018 11:43:00 PM Rating: 5