ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த அதிரடி நடவடிக்கை இதோ

மக்களுக்கு இன்று (13) உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினால் கிடைத்த வெற்றியைக் கொண்டாடுவதற்கு நாளை மறுதினம் (15) லிப்டன் சுற்றுவட்டத்தில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அறிவித்தார்.

இதேவேளை,  நாளை மறுதினம் ஜனநாயகத்தை மதிக்கும் சகலருக்கும் கொழும்பில் ஒன்று கூடுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா அறிவித்தார்.

பல்லாயிரக் கணக்கானவர்களை கூட்டி இந்த அரசாங்கத்துக்கு தமது எதிர்ப்புக்களை வெளிக்காட்டவுள்ளதாகவும் இன்று மாலை உயர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அஜித் எம்.பி. மேலும் கூறினார். 
ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த அதிரடி நடவடிக்கை இதோ ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த அதிரடி நடவடிக்கை இதோ Reviewed by Vanni Express News on 11/13/2018 09:45:00 PM Rating: 5