பாராளுமன்றம் கலைப்பு அரசியல் நெருக்கடியை மேலும் அதிகரிக்கும் அமெரிக்கா கவலை

இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் கவலையடைந்துள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. 

அது அரசியல் நெருக்கடியை மேலும் அதிகரிக்கும் என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. 

அமெரிக்க தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையின் உறுதியான பங்காளர் என்ற வகையில், ஸ்திரத்தன்மை, சுபீட்சத்தை உறுதிபடுத்த ஜனநாயக நிறுவனங்கள், நடவடிக்கைகள் மதிக்கப்பட வேண்டும் என்று நாம் கருதிகிறோம் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்றம் கலைப்பு அரசியல் நெருக்கடியை மேலும் அதிகரிக்கும் அமெரிக்கா கவலை பாராளுமன்றம் கலைப்பு அரசியல் நெருக்கடியை மேலும் அதிகரிக்கும் அமெரிக்கா கவலை Reviewed by Vanni Express News on 11/10/2018 11:27:00 AM Rating: 5