கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட முஸ்லீம்களை பார்வையிட்ட யாழ் முதல்வர்

-பாறுக் ஷிஹான்

யாழ்.மாநகரசபை எல்லைக்குள் உள்ள தாழ் நிலப்பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  சாபிநகர்  புதிய சோனகதெரு 1ஆம் குறுக்கு பகுதி   மற்றும் புதிய குடியிருப்பு அராலி வீதி ஆகிய பகுதியில் வாழும் முஸ்லீம்   மக்களை நேரில் சென்று மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் பார்வையிட்டுள்ளார்.

கஜா புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக அப்பகுதி  மக்கள் குடியிருப்பு பிரதேசங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப் பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இப்பகுதிகளை நேரடியாக கடந்த சனிக்கிழமை(17) சென்று பார்வையிட்ட முதல்வருடன மாநகர சபை உறுப்பினர்களான  கே.எம். நிலாம்  மற்றும் எம்.எம்.எம். நிபாஹிர்  உள்ளிட்டோர் இணைந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விளக்கினர். 

பிரச்சினைகளை ஆராய்ந்த முதல்வர் அவர்கள் அப் பகுதி மக்களிடம் கருத்து வெளியிடும் போது தற்பொழுது மழைக்காலம் என்பதனால் பாரிய திட்டங்களை மேற்கொள்வது கடினமாகக் காணப்படும் என்றும் இனிவரும் காலங்களில் வெள்ளம் தேங்காது இருக்கக்கூடிய வகையில் குறித்த பகுதிகளை ஒழுங்குபடுத்துவதற்கான பொறிமுறையொன்று குறித்து மாநகரசபையின் ஊடாக ஆராய்வதாக தெரிவித்தார்.
கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட முஸ்லீம்களை பார்வையிட்ட யாழ் முதல்வர் கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட முஸ்லீம்களை பார்வையிட்ட யாழ் முதல்வர் Reviewed by Vanni Express News on 11/18/2018 11:19:00 PM Rating: 5