மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறந்து வைப்பு

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ரஜரட்ட மக்களுக்காக கண்ட கனவை நனவாக்கும் வகையில் அவரது முழுமையான கண்காணிப்பின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட துரித மகாவலி திட்டத்தின் இறுதி திட்டமான மொரகஹகந்த ஏ.என்.எஸ்.குலசிங்ஹ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று (30) முற்பகல் திறக்கப்பட்டன.

நீர்த்தேக்கத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்து நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் முதன்முறையாக வான் கதவு மட்டத்தை அடைந்துள்ள நிலையில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்றைய தினம் நீர்த்தேக்க வளாகத்தை பார்வையிட்டார்.

ஜயந்தி சிறிசேன அம்மையார், இராஜாங்க அமைச்சர் லக்ஷமன் வசந்த பெரேரா, மகாவலி பணிப்பாளர் நாயகம் கலாநிதி டி.எம்.எஸ். திசாநாயக்க, மொரகஹகந்த நீர்த்தேக்கத் திட்டத்தின் பணிப்பாளர் டி.பி.விஜேரத்ன உள்ளிட்ட மகாவலி அதிகார சபை அதிகாரிகள் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.Image may contain: 2 people, cloud, sky and outdoorImage may contain: one or more people, cloud, sky, grass, outdoor and natureImage may contain: 10 people, people smiling, people standing and outdoorImage may contain: 6 people, people smiling, people standing and outdoorImage may contain: one or more people, people standing, cloud, sky, outdoor, water and natureImage may contain: 5 peopleImage may contain: sky, outdoor, water and nature
மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறந்து வைப்பு மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறந்து வைப்பு Reviewed by Vanni Express News on 11/30/2018 05:41:00 PM Rating: 5