இலங்கை பணியாளர்களை தொழிலுக்கு அமர்த்துவது தொடர்பில் கட்டார் ஊக்குவிக்கும்

கட்டார் வர்த்தக சபை மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பொன்று டோஹாவில் நடைபெற்றுள்ளது.

இருநாடுகளுக்கிடையில் தொழில் வாய்ப்பிற்கான சந்தர்ப்பம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

கட்டார் வர்த்தக சபையின் முதலாவது துணைத்தலைவர் மொஹமட் பின் ரவர் அல்குவாறி (Mohamed bin Towar al-Kuwari) மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியத்தின் செயலாளர் யமுனா பெரேரா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பம் தொடர்பில் எதிர்நோக்கப்படும் சவால்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இது குறித்து கட்டார் வர்த்தக சபை அறிக்கையொன்றினை விடுத்துள்ளது.

இலங்கையிலிருந்து தகுதியான பயிற்றுவிக்கப்பட்ட பணியாளர்களை வரவேற்பதாக துணைத்தலைவர் மொஹமட் பின் ரவர் அல்குவாறி தெரிவித்துள்ளார்.

இதில் கலந்துகொண்ட கட்டார் வர்த்தக சபை அதிகாரிகள் தென்கிழக்காசிய நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு தமது நாடு உதவுவதாக தெரிவித்தனர். கட்டார் நாட்டின் பொருளாதாரத்திற்கு இலங்கை பணியாளர்கள் மேற்கொண்டுவரும் அர்ப்பணிப்பையும் இதன்போது துணைத்தலைவர் பாராட்டினார்.

கட்டார் சபையினர் வர்த்தக நிறுவனங்களில் இலங்கை பணியாளர்களை மேலும் தொழிலுக்கு அமர்த்துவது தொடர்பில் சபை ஊக்குவிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கட்டட நிர்மாணம், சேவைகள், சுகாதரத்துறை உள்ளிட்ட பல பிரிவுகளில் பணியாற்றக்கூடிய தகுதிவாய்ந்த பயிற்றுவிக்கப்பட்ட பணியாளர்களை கட்டாருக்கு அனுப்புவதில் இலங்கை ஆர்வமாக இருப்பதாக யமுனா பெரேரா குறிப்பிட்டார்.
இலங்கை பணியாளர்களை தொழிலுக்கு அமர்த்துவது தொடர்பில் கட்டார் ஊக்குவிக்கும் இலங்கை பணியாளர்களை தொழிலுக்கு அமர்த்துவது தொடர்பில் கட்டார் ஊக்குவிக்கும் Reviewed by Vanni Express News on 11/28/2018 10:50:00 PM Rating: 5