பிடிபட்ட இளைஞரிடம் நீண்ட விசாரணை - சந்தேகநபர்கள் 7 பேருக்கும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியல்

மாவனல்லை மற்றும் அண்டிய பகுதிகள் பலவற்றிலும் புத்தர் சிலைகள் பலவற்றுக்கு சேதம் ஏற்படுத்திய சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள ஏழு பேரையும் எதிர்வரும் 02 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மாவனல்லை மஜிஸ்ட்ரேட் நீதிபதி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் பணிப்பின் பேரில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் கேள்விப்பட்டவுடன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட பொலிஸ் குழுவொன்றையும் குறித்த இடத்துக்கு அனுப்பி வைக்க பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் நிகழ்ந்த வேளையிலேயே பிடிபட்ட இளைஞரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் பின்னர் ஏனைய சந்தேகநபர்களை கைது செய்ததாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்னும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்படவுள்ளதாகவும் அவர்கள் அப்பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பிடிபட்ட இளைஞரிடம் நீண்ட விசாரணை - சந்தேகநபர்கள் 7 பேருக்கும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியல் பிடிபட்ட இளைஞரிடம் நீண்ட விசாரணை - சந்தேகநபர்கள் 7 பேருக்கும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியல் Reviewed by Vanni Express News on 12/28/2018 12:02:00 AM Rating: 5