வேன் ஓட்டுனருக்கு நித்திரை - தாய் பலி - தந்தை மற்றும் குழந்தைகள் வைத்தியசாலையில்

இன்று (26) அதிகாலை 1.05 மணியளவில் அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். 

மாத்தறை நோக்கி பயணித்த வேன் ஒன்று ஓட்டுனருக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக அருகில் இருந்த கம்பத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய் மற்றும் குழந்தைகள் மூவர் குறித்த வேனில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

விபத்தில் காயமடைந்த நால்வரை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தாய் உயிரிழந்துள்ளதுடன் 14 வயதுடைய பெண் பிள்ளை ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக ஹொரண வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

காலி, வலகஸ்துவ பகுதியை சேர்ந்த 48 வயதுடைய நிர்மலா குமுதினி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் கெலனிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வேன் ஓட்டுனருக்கு நித்திரை - தாய் பலி - தந்தை மற்றும் குழந்தைகள் வைத்தியசாலையில் வேன் ஓட்டுனருக்கு நித்திரை - தாய் பலி - தந்தை மற்றும் குழந்தைகள் வைத்தியசாலையில் Reviewed by Vanni Express News on 12/26/2018 03:31:00 PM Rating: 5