லொறியை முந்திச் செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்து - ஒருவர் பலி

பதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுளை - மஹியங்கனை வீதியின் மீகஹகிவுல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மோட்டார் சைக்கிள் ஒன்று லொறி ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிரில் வந்த பேருந்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

நேற்று (26) மாலை 6.10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மீகஹகிவுல பகுதியை சேர்ந்த 59 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
லொறியை முந்திச் செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்து - ஒருவர் பலி லொறியை முந்திச் செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்து - ஒருவர் பலி Reviewed by Vanni Express News on 12/27/2018 03:36:00 PM Rating: 5