பாதை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதிய கொள்கலன் - இருவர் பலி

வத்தளை, ஹேகித்த சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவி ஒருவரும் பெண் ஒருவரும் உயிரிழந்துள்தாக தெரிவிக்கப்படுகின்றது. 

நீர்கொழும்பு நோக்கிச் பயணித்த கொள்கலன் ஒன்று பாதை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்தில் படுகாயமடைந்த இருவரும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

உயிரிழந்த பெண் 21 வயதுடையவர் எனவும் உயிரிழந்த மாணவி 12 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

விபத்து தொடர்பில் கொள்கலன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதிய கொள்கலன் - இருவர் பலி பாதை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதிய கொள்கலன் - இருவர் பலி Reviewed by Vanni Express News on 12/29/2018 04:48:00 PM Rating: 5