மோட்டார் சைக்கிள் கொள்கலன் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது விபத்து - பெண் ஒருவர் பலி

கந்தான, மொரவத்த சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

நீர்கொழும்பு நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், கொள்கலன் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

விபத்தில் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரில் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இந்த விபத்தில் உயிரிழந்தசர் கந்தான, செபாஸ்டியன் மாவத்தையை சேர்ந்த 21 வயதான பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

சம்பவத்துடன் தொடர்புடை கொள்கலன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிள் கொள்கலன் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது விபத்து - பெண் ஒருவர் பலி மோட்டார் சைக்கிள் கொள்கலன் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது விபத்து - பெண் ஒருவர் பலி Reviewed by Vanni Express News on 12/30/2018 11:23:00 PM Rating: 5