இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் சிறுவன் பலி


கீரியங்கள்ளி, முந்தலம் வீதியின் கல்குலிய பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். 

இன்று (04) காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கல்குலிய பகுதியை சேர்ந்த 4 வயதுடைய மெதுல பிம்சர எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். 

குறித்த சிறுவன் தனது தந்தை மற்றும் 15 வயதுடைய மற்றுமொரு சிறுவனுடன் நீர் எடுத்துவர சென்ற சந்தர்ப்பத்தில் எதிர்திசையில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

பொலிஸ் கான்ஸ்டபிள் தலைக்கவசம் அணிந்திருந்ததுடன் ஏனைய மூவரும் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

விபத்தில் காயமடைந்தவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் முந்தலம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் சிறுவன் பலி இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் சிறுவன் பலி Reviewed by Vanni Express News on 12/04/2018 11:04:00 PM Rating: 5