அதிக வேகமாக பயணித்த பஸ் கொள்கலன் ஒன்றுடன் மோதி விபத்து - மூன்று பேர் காயம்

குருணாகல் - தம்புள்ளை பிரதான வீதியில் கலேவலை, கனாதன பிரதேசத்தில் இன்று காலை திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இ.பே.ச பஸ் ஒன்றும், கொள்கலன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 

கொள்கலன் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த கடை ஒன்றில் மோதியுள்ளதுடன், விபத்தில் மூன்று பேர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

பஸ்ஸின் சாரதி உள்ளிட்ட பஸ்ஸில் பயணித்த இரண்டு பயணிகளும் இவ்வாறு காயமடைந்துள்ளனர். 

பஸ் அதிக வேகமாக பயணித்துள்ளதாகவும், மழை காரணமாக வீதி சறுக்கியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இரண்டு சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கலேவலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதிக வேகமாக பயணித்த பஸ் கொள்கலன் ஒன்றுடன் மோதி விபத்து - மூன்று பேர் காயம் அதிக வேகமாக பயணித்த பஸ் கொள்கலன் ஒன்றுடன் மோதி விபத்து - மூன்று பேர் காயம் Reviewed by Vanni Express News on 12/08/2018 04:02:00 PM Rating: 5