தன்னுடைய சொத்து முழுவதையும் தானமாக கொடுத்த பிரபல நடிகர்

தன்னுடைய சொத்து முழுவதையும் தானமாக எழுதி வைப்பதாகக் கூறி, பிரமிக்கச் செய்துள்ளார் நடிகர் சவ் யுன் ஃபேட்.

`மரணத்துக்குப் பின்னர் உங்களால் பணத்தை எடுத்துச் செல்ல முடியுமா?' என்றபடி தன் சொத்துக்கள் முழுவதையும் தானமாக எழுதி கொடுக்க முன்வந்துள்ளார் நடிகர் சவ் யுன் ஃபேட். Crouching Tiger, Hidden Dragon என்ற படத்தில் இவரது படங்களில் மிகவும் பிரபலமானது. தமிழில் `பாயும் புலி, பதுங்கும் நாகம்' என்ற பெயரில் டப் செய்து படம் வெளியானது. ஏ பெட்டர் டுமாரோ உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டது. 62 வயதாகும் நடிகர் சவ் யுன், `த கிவ்விங் ப்ளட்ஜ்' ("The Giving Pledge") என்ற ஒப்பந்ததில் கையெழுத்திட்டுள்ளார். 

ஏழைகளுக்கு உதவும் எண்ணம் கொண்ட பணக்காரர்கள் இதில் தங்களை இணைத்துக்கொள்வது வழக்கம். ஏழை எளியவர்களுக்கு தானம் வழங்குவதற்காக இது தொடங்கப்பட்டது. 2010-ம் ஆண்டு பில்கேட்ஸ் மற்றும் வாரன் பஃப்பட் ஆகியோர் இந்த இயக்கத்தைத் தொடங்கினர். இதில் மொத்தம் 186 பேர் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர். அந்தவகையில் நடிகர் சல் யுன் ஃபேட்டும் தற்போது தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.

ஆண்டுதோறும் ஃபோர்ப்ஸ் பத்திரிகை அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பெயர் பட்டியலை வெளியிடும். அப்படி 2015-ம் ஆண்டு வெளியான பட்டியலில் சவ் யுன் ஃபேட் இடம்பிடித்திருந்தார். எளிமையான வாழ்வையே தொடர்ந்து கடைப்பிடித்து வந்தார். அவரது எளிமை குறித்து மனைவி ஜாஸ்மின் டன், ``சாலையோர உணவகங்களில் அதிகமாக சாப்பிடுவார். 

மேலும், எளிமையான சாப்பாட்டையே விரும்பக்கூடியவர்' என்றார். ஐந்தாயிரம் கோடி அளவிலான சொத்துகளை அவர் தானமாக வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தன் முடிவுக்கு தன் மனைவியும் உறுதுணையாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பேசுகையில், `நான் மற்றவர்களுக்காக எப்போதும் வாழ்வதில்லை. மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக உயர் ரக ஆடைகள் அணிவதில்லை. எனக்கு எது சரியாக இருக்கின்றதோ அந்த ஆடைகளை மட்டுமே உடுத்துவேன். பணம் எப்போதும் நம்முடன் இருக்கப்போவதில்லை. இந்த உலகை விட்டு ஒருநாள் நீங்கள் பிரிய நேரிடும். அப்போது நீங்கள் உங்கள் உடைமைகளை விட்டுச் செல்ல வேண்டும். உங்கள் பொருள்கள் உங்களுக்குப் பின் மற்றவர்களுக்குப் பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும். மரணத்துக்குப் பின்னர் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை உங்களுடன் எடுத்துச் செல்லவா முடியும்? அதனால் என் இறப்புக்குப் பின்னர் எனது சொத்திலிருந்து ரூ.5,000 கோடி பணத்தை மக்களுக்கு தானமாக வழங்க உறுதியேற்றுள்ளேன்" என அவர் கூறியுள்ளார்.

அவரது இந்த கருத்துகள் பலருக்கு வியப்பையும், பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது. கடந்த 17 ஆண்டுகளாக நோக்கியா ஃபிலிப் பேஸிக் மாடல் மொபைலை மட்டுமே உபயோகித்து வந்தார். தற்போது அந்த மொபைல் வேலை செய்யாமலிருக்கவே அவர் ஸ்மார்ட்போனுக்கு மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
தன்னுடைய சொத்து முழுவதையும் தானமாக கொடுத்த பிரபல நடிகர் தன்னுடைய சொத்து முழுவதையும் தானமாக கொடுத்த பிரபல நடிகர் Reviewed by Vanni Express News on 12/26/2018 11:59:00 PM Rating: 5