69 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளுடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

69 இலட்சம் ரூபா பெறுமதியான 9 தங்க நகைகளுடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சந்தேக நபர் தனது பயணப்பையில் தங்க நகைகளை மறைத்து வைத்து எடுத்துச் செல்ல முற்பட்ட போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த தங்க நகைகள் 150 கிராம் நிறையுடைய 69 இலட்சம் ரூபா பெறுமதியுடையவை என தெரிவிக்கப்படுகின்றது. 

வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
69 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளுடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது 69 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளுடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது Reviewed by Vanni Express News on 12/20/2018 03:39:00 PM Rating: 5