பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் இளைஞன் ஒருவன் கைது

கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். 

பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளான். 

சம்பவம் தொடர்பில் பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் இளைஞன் ஒருவன் கைது பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் இளைஞன் ஒருவன் கைது Reviewed by Vanni Express News on 12/25/2018 10:44:00 PM Rating: 5