கேரளா கஞ்சாவுடன் சிவனொளிபாதமலை தரிசிக்க சென்ற 7 இளைஞர்கள் கைது

-க.கிஷாந்தன்

போதைப்பொருளுடன் சிவனொளிபாதமலை தரிசிக்க சென்ற 7  இளைஞர்கள் நேற்று ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இந்த 7 பேரும் கேரள கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் விசேட குற்றத்தடுப்பு பிரிவு அட்டன் கொழும்பு பிரதான வீதியில் அட்டன் பகுதியில் நேற்று காலை 11.00 மணிமுதல் இரவு வரை வாகனங்களை சோதனை  செய்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மாத்தறை, கொழும்பு, உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் இன்றைய தினம் ட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சிவனொளிபாதமலைக்கு போதை வஸ்த்துக்களை கொண்டு செல்வதனை தடுப்பதற்காக ட்டன் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.
கேரளா கஞ்சாவுடன் சிவனொளிபாதமலை தரிசிக்க சென்ற 7 இளைஞர்கள் கைது கேரளா கஞ்சாவுடன் சிவனொளிபாதமலை தரிசிக்க சென்ற 7 இளைஞர்கள் கைது Reviewed by Vanni Express News on 12/26/2018 10:32:00 PM Rating: 5