ஒரு தொகை வல்லப்பட்டையுடன் இருவர் கட்டுநாயக்கவில் கைது

-ஐ. ஏ. காதிர் கான் 

சட்ட விரோதமான முறையில் ஒரு தொகை வல்லப்பட்டையினை டுபாய் நோக்கி எடுத்துச் செல்ல முற்பட்ட இருவர், ஞாயிற்றுக்கிழமை (02) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு - 10 மற்றும் கொழும்பு - 12 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 40 மற்றும் 34 வயதுடைய இருவரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.55 மணிக்கு டுபாய் நோக்கிப் பயணிக்கவிருந்த UL - 231 என்ற விமானத்தின் மூலம், பயணத்தை மேற்கொள்வதற்காகவே சந்தேக நபர்கள் இருவரும், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 4,008,250 ரூபா பெறுமதியான 79 கிலோ 250 கிராம் எடையுடைய வல்லப்பட்டை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு தொகை வல்லப்பட்டையுடன் இருவர் கட்டுநாயக்கவில் கைது ஒரு தொகை வல்லப்பட்டையுடன் இருவர் கட்டுநாயக்கவில் கைது Reviewed by Vanni Express News on 12/03/2018 05:15:00 PM Rating: 5