கேரளா கஞ்சாவினை வாகனத்தில் கடத்தி சென்ற ஐவர் கைது

-வவுனியா நிருபர் சசிகரன்

வவுனியா ஒமந்தை பகுதியில் ஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவினை வாகனத்தில் கடத்தி சென்ற ஜவரை இன்று (05.12.2018) அதிகாலை ஓமந்தை பொலிசார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி  நனோ ரக வாகனத்தில் கேரளா கஞ்சாவினை கொண்டு செல்வதாக ஒமந்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஒமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் குறித்த வாகனத்தினை ஒமந்தை பகுதியில் வைத்து மறித்துள்ளனர்.

இதன் போது வாகனம் நிற்காமல் அதிவேகமாக சென்றுள்ளது. வாகனத்தினை பின்தொடர்ந்த பொலிஸார் வாகனத்தினை மடக்கிப்பிடித்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சோதனை நடவடிக்கையின் போது வாகனத்தினுள்ளிருந்து 2கிராம் 300 மில்லிக்கிராம் ஹெரோயின் மற்றும் இரண்டு கிலோ 50 கிராம் கேரளா கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியதுடன் வாகனத்தில் பயணித்த பரந்தன் மற்றும் திருகோணமலை பகுதியினை சேர்ந்த 30,29,18,36,45 வயதுடைய ஜவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் வாகனத்தினையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில்  ஆயர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கேரளா கஞ்சாவினை வாகனத்தில் கடத்தி சென்ற ஐவர் கைது கேரளா கஞ்சாவினை வாகனத்தில் கடத்தி சென்ற ஐவர் கைது Reviewed by Vanni Express News on 12/05/2018 11:42:00 PM Rating: 5