தமிழ் கூட்டணயின் சாணக்கிய நகர்வுகள் வெற்றி காணுமா ?


-ஐனுதீன், கிண்ணியா

ஜனாதிபதி அவர்கள் தனது முழு அதிகாரத்தையும் பயன் படுத்தி பிரதமரை செயல் இழக்க வைத்து இன்றுடன் ஒரு மாதத்தைத் தாண்டி விட்டது இந்தக் கால எல்லைக்குள் சிறுபான்மைக் கட்சிகள் தனது சமூக நலனுக்காகவும் தங்கள் நலனுக்காகவும் காய் நகர்த்திய விதம் எவ்வாறு என நாங்கள் அறிந்தாலும் அதன் உள் நோக்கமான சாணக்கிய சிந்தனைகளை நாம் கண்டு கொள்ள வில்லை என்பதுதான் உண்மையாகும். இந்த அடிப்படையில் TNA. போன்ற சிறு பான்மைக் கட்சி தானாக வந்து கிடைத்த சந்தர்ப்பங்களை எப்படி தங்களது சமூகத்துக்காக திசை மாற்றினார்கள் என்பதை கொஞ்சம் ஆய்ந்து பார்ப்போம்.

தமிழ் மக்கள் தமது இருப்பையும் அரசியல் ரீதியான உரிமையினையும் மீட்டெடுக்க முப்பது ஆண்டுகாலம் ஆயுத ரீதியாகப்போராடினாலும் ஒரு காலத்தில் ஆயுதம் தோக்கடிக்கப் படும் என்ற நோக்கில் சிறந்த ஒரு அரசியல் பிரிவினை உருவாக்கினார்கள். அதில் இரண்டு வகையான அரசியல் பிரிவுகள் உருவானது ஒன்று ஆயுத ரீதியான பிரிவு மற்றது ஜனநாயக ரீதியான பிரிவு. இந்த ஜனநாயகப் பிரிவுதான் தற்போதைய தமிழ் தேசிய கூட்டமைப்பாகும். இதில் பல தமிழ்க் கட்சிகள் உள்வாங்கப்பட்டாலும் ஒரே கொள்கைகளையைக் கொண்டவர்கள்.

அதாவது 1987ம் ஆண்டு நடந்த அரசியல் சீர்திருத்தத்திலும் வடக்கு கிழக்கு ஒப்பந்தத்திலும் இலங்கை ஒம்பது மாகாணங்களாக வகுக்கப் பட்டிருந்தது. அதன் பின்னேர் 1988 டிசம்பர் 26ம் திகதி ரஜிவ் காந்தி அவர்கள் ஜே, ஆர் அவர்களுக்கு கொடுத்த அழுத்தம் மற்றும் பிரபாகரன் காட்டிய கடுமையான பிடிவாதம் காரணமாக  தற்காலிகமாக வடக்குடன் கிழக்கு இணைக்கப்பட்டது.  அந்த வேளை கொழும்பில் சிங்கள மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடு பட்டனர் அதனால்  மீண்டும் அந்த ஒப்பந்தத்தில் சர்வஜன வாக்கெடுப்பு என்று இன்னும் ஒரு பகுதி சேர்க்கப் பட்டது. அந்த இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணத்தில் முதலாவது முதல் அமைச்சராக வந்த வரதராஜ பெருமால் செய்த கூத்துக்கள் அதிகம் எல்லை தாண்டி தனி நாட்டுப் பிரகடனம் செய்து நாட்டை விட்டு ஓடினார் அந்த வடகிழக்கின் முதல்வர் வரதராஜன். 

அதன் பின் ஜே, ஆர் மரணமானதும் ஆர், பிரமெதாசா அவர்கள் ஜனாதிபதி ஆனதும் இந்தியா அமைதி காக்கும் இரணுவம் இலங்கையை விட்டு திருப்பி அனுப்பிய வேளை இணைந்த வடக்கும் கிழக்கும் செல்லாது என்று JVP ,அத்தாவுள்ளா , போன்றோர்கள் உச்சநீதி மன்றில் வழக்குத் தாக்கல் செய்த போது நீதி மன்றம் இந்த இணைப்பு தற்காலிகமாக பிரிக்கப் படுகிறது என்ற அடிப்படையில்த்தான் தீர்ப்பு வழங்கியது. ஆனால் அது நிறந்தரமான பிரிவு அல்ல என்பதை முதலில் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். மீண்டும் அரசியல் அமைப்பின் படி பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் சர்வஜன வாக்கெடுப்பின் அடிப்படையிலும்  இணையலாம். இருந்தும்  இது சாத்தியப் படாது என்று எண்ணிய தமிழ் கூட்டணி ஒரு திட்டம் வகுத்தது அதுதான் வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் கூட்டணி முதல் அமைச்சராக வந்து  ஒரே நிர்வாகத்தில் இரண்டு மாகாணத்தையும் அவர்கள் தனி நிர்வாகமும் செய்யலாம் என்ற திட்டமாகும். அதாவது இரண்டு முதல்வர் ஒரு கட்சியின் நிர்வாகம் என்ற சிந்தனை  இதைக் கடைசியில் பார்ப்போம்.

இப்படியான சூழ்நிலையில் மீண்டும் யுத்தம் புலிகள் தோக்கடிக்ப்பட்டனர். புலிகள் தோக்கடிக்கப் பட்டாலும் அவர்கள் வளர்த்த ஜனநாயக ரீதியான அரசியல் பிரிவினை மஹிந்தாவினாலும் தோல்வி காண முடியாது போனது. அதனால் மஹிந்த பல திட்டங்களை வகுத்து வடக்கு மாகாண முதல்வராக விக்னேஸ் வரனை கொண்டு வந்தார் அவர் கூட்டணி முதல்வராக இருந்தாலும் அது மஹிந்தாவின் திட்டமிடல் முதல்வராவர்  கஜந்திரக் குமார் மற்றும் டக்லஸ் போன்றவர்களை வடக்கில் களமிறக்கி கிழக்கில் கருணா போன்றோர்களைக் கொண்டு வந்தும் தமிழ் மக்களின் அரசியலை பிரிக்காமல் திணரிய வேளை நல்லாட்சி மலர்ந்தது அதில் தமிழ் கூட்டணி எதிர்க் கட்சி ஆசனம். என்றாலும் ஒரு அமைச்சரவையாக அவர்கள் செயல் பட்டார்கள் என்பது நாம் கண்ட உண்மை.

அதே நேரம், ஜே, ஆர், சந்திரிக்கா மற்றும் மஹிந்தா காலத்தில் வெளி நாடுகளின் அழுத்தங்கள் இலங்கை மீது அதிகமாக இருந்தது அதை வைத்து தங்களது கட்சியை வளர்த்த கூட்டணி நல்லாட்சி மலர்ந்ததுக்குப் பிறகு வெளி நாடுகள் இலங்கையில் சமாதானம் மலர்ந்துள்ளது என்று அரசுக்கு உதவ முன் வந்ததால் கூட்டணியின் பாடு அம்போ என்ற நிலைக்கு வந்தது. அதை நங்கு உணர்ந்து எதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்து தங்களது கட்சியினை நங்கு வளர்த்துக் கொள்ளப் பயன் படுத்தியது  நடந்த உள்ளூராட்சி தேர்தலின் முடிவு எமக்கு எடுத்துக் காட்டுகிறது. அதிலும் தற்போதைய பாராளு மன்ற இழு பறி காரணமாக மீண்டும் வெளி நாடுகளின் அழுத்தம் இலங்கை மீது பாய்ந்துள்ளது இதையும் தங்களுக்கு சாதகமாகப் பயன் படுத்திக்கொள்ள தீட்டிய திட்டம் அரசியல் அமைப்பு சீர்திருத்தமும் ஏனைய கோரிக்கைகளும். எந்த சந்தர்ப்பங்கள் அமைந்தாலும் அதை தனக்கு சாதகமாக மாற்றியமைக்கும் சாணக்கியம் கொண்ட கூட்டணியின் செயல்களை வாழ்த்தியாக வேண்டும்.

 இந்த ஒரு மாத காலங்களில் முழு நாடும் மிகவும் குழப்பமான நிலையில் குழம்பிப் போய் இருக்கையில் இந்த சூழலையும் தனக்கு சாதகமாகப் பயன் படுத்தியது. தமிழ் கூட்டணி.    மஹிந்தாவிடம் போனால் ஏதும் நடக்க இயலாது  மஹிந்தாவை தமிழ் மக்கள் ஏற்றும் கொள்ளவும்  மாட்டார்கள் . மஹிந்தா சகோதரர்களை மீறி ஏதும் செய்யவும் முடியாது என சிந்தித்தவர்கள். தனது மக்களுக்கு  கொஞ்சமாவது உதவ முடியும் என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில், ரணில் அவர்கள் 2000ம் ஆண்டு சந்திரிக்கா அம்மையார் கொண்டு வந்த அரசியல் சட்டசீர் திருத்தத்தை தீ இட்டுக் கொழுத்தியதையும் பொருள்ப் படுத்தாது  ரணிலுக்கு ஆதரவு வழங்க முன் வந்தார்கள்  கூட்டணியினர் சில நிபந்தனைகை முன் வைத்து. அவை சிறைக் கைதிகளை விடுவித்தல், இரணுவ முகாம்களை அகற்றி தமிழ் மக்களின் காணிகளை விடுவித்து குடியேற்றங்களை புணர் வாழ்வுடன் நடைமுறை படுத்துவதாகும். ஆனால் அவர்கள் வடக்கு கிழக்கு இணைப்பை பெரிதாக அலட்டிக்கொள்ள வில்லை காரணம் சிங்கள மக்களின் எதிர்ப்பு முன்னைய விட இப்ப கடுமையாகும் என்பதுதான். இருந்தும்  அதுக்கும் தகுந்த திட்டம் அவர்களிடம் உண்டு.

அதாவது, மாகாண சபை தேர்தலில் கிழக்கில் சிங்களக் கட்சிகளுடன் இணைந்து அவர்களின் துணை கொண்டு தமிழ் முதல்வரைக் கிழக்கில் பெற்றுக் கொள்வதாகும். இது சாத்திய பட முடியாது என்றும் சொல்ல முடியாது. கிழக்கில் 35% வீதமுள்ள முஸ்லிம்கள் பல கட்சிகளாக பிரியும் போது அதிக ஆசனங்கள் கிடையாது கூட்டணியில் ஆசனங்களுடன் ஏதாவது ஒரு தேசிய கட்சி இணையும் போது இது நடக்கலாம்  நீங்கள் நினைத்திருக்க மாட்டீர்கள் ரணிலுக்கு கூட்டணி வாக்களிக்கும் என்று அதே வேளை எதிர்க் கட்சியை கூட்டணி கைப்பற்றும் என்றும்.  அது நடந்தது என்றால் இதுவும் நடக்க வாய்ப்புள்ளதுதானே.

ஆனாலும் இதுக்குள்ளும் ஒரு எதிர் நிலை அடங்கியுள்ளது. கூட்டணியின் கோரிக்கைகளை ரணில் நிறைவேற்ற வில்லை என்றால் தமிழ் கூட்டணிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு குறைந்து விடும். அதே நேரம் ஐ தே கட்சி வடகிழக்குக்கு வெளியிலுள்ள 80% மான வாக்குகளை இழக்க நேரிடும் என்பதால் கூட்டணி இட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற பின்னடிக்கலாம். இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன் படுத்தி எமது இரண்டு கட்சிகளான .SLMC .ACMC சும் அத்தாவுள்ளா மற்றும் ஹிஸ்புள்ளா அவர்கள் ஒன்று பட்டு காய் நகர்த்தினால் வெற்றி நமது பக்கம் திரும்பவும் வாய்ப்புண்டு. எது நடக்கும் என்பதைக் காலந்தான் பதில் சொல்ல வேண்டும்.

நன்றி,
தமிழ் கூட்டணயின் சாணக்கிய நகர்வுகள் வெற்றி காணுமா ? தமிழ் கூட்டணயின் சாணக்கிய நகர்வுகள் வெற்றி காணுமா ? Reviewed by Vanni Express News on 12/03/2018 05:46:00 PM Rating: 5