ஞாசாராவும் அவர்களது முஸ்லிம் கூட்டாளிகளும்..!

-எம் எச் எம்.இப்றாஹிம் கல்முனை.

நாடு பயங்கரவாதத்தின் பிடியிலே இருந்தபோது நாட்டுக்காக எந்தக் குரலையும் கொடுக்கவிரும்பாதபொதுபலசேனாவின் செயலாளர் ஞானசாரா அவர்கள். யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின் குறிப்பாக 2010க்கு பிறகு அவர்களுடைய செயல்பாடுகள் தீவிரமடைத்திருந்ததையும் நாம் அறிவோம். அவர்களுடைய அந்த இனவாத நடவடிக்கைகள் அனைத்தும், 30வருடங்களாக நாட்டைத்  துவம்சம் செய்த தமிழ் சமூகத்தின் மீது திரும்பாமல், நாட்டில் எந்தக்காட்டிக் கொடுப்புக்கும் துணைப்போகாத முஸ்லிம்களின் மீதுதான் திரும்பியிருந்ததை நாம் அறிந்திருந்தோம்.

இந்த நாட்டுக்கு எந்த அநியாயத்தையும் சிந்திக்காத செய்யாத முஸ்லிம் சமூகத்தின் மீது ஏன் இந்தக் கோபம் அவர்களுக்கு ஏற்படவேண்டும் என்ற கதைக்கு பின்னால் ஒரு சதியின் அரங்கேற்றமே உள்ளது என்பதை முஸ்லிம் சமூகமோ அல்லது அன்றய ஆட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்சவோ அறிந்திருக்க தவறியிருந்தனர்.

நாட்டில் 30 வருடங்களாக வேறூன்றிப் போயிருந்த யுத்தத்தை மிகவும் ஆச்சரியமான முறையில் முடிவுக்கு கொண்டுவந்த விடயமானது,  தமிழ் சமூகத்தை மட்டுமல்ல, இந்த யுத்தத்தை வைத்து லாபம் அடைந்துவந்த மேற்குலகத்துக்கும், இதே காரணத்தைக் காட்டி வெளிநாடுகளில் இடம்பெயர்ந்து வாழ்ந்துவந்த தமிழ் டயஸ்போராக்களுக்கும் பெரும் பேரிடியாகவே அமைந்துவிட்டது.

இந்த நிலையில் இந்த யுத்தவெற்றியின் மூலம் பெரும்பாண்மை சிங்கள மக்களின் கதாநாயகனாக மாறிய மஹிந்த என்பவரை வீழ்த்துவதற்கு இந்த ஜென்மத்தில் முடியாது என்று நினைத்த மேற்குலகமும், டயஸ்போராக்களும், மிகவும் நுணுக்கமான முறையில் அவர்களுடைய சதியை அரங்கேற்றத் திட்டம் தீட்டி செயல்பட்டனர். 

அந்தவகையில் முதலில் அவர்கள் கையாண்ட விடயம்தான், இந்த யுத்தத்தில் இராணுவத் தளபதியாக செயல்பட்ட சரத்பொன்சேகா அவர்களை மஹிந்தவுக்கு எதிராக களம் இறக்கிய விடயமாகும். 2010ம் ஆண்டய ஜனாதிபதி தேர்தலில் அந்த திட்டமானது புஷ்வானமாகப் போனபோதுதான் மிகவும் அதிர்ச்சியடைந்தார்கள்.

இதன் பின்புதான் மாபெரிய திட்டம் ஒன்றை மஹிந்தவுக்கு எதிராக செயல்படுத்த திட்டம் தீட்டினார்கள். அந்த திட்டத்துக்கு ஆதரவாக மஹிந்தவின் மீது அரசியல் ரீதியாக எதிரிகளாக உள்ள அத்தனைபேர்களையும் இனம்கண்டு அவர்களை ரகசியமான முறையில் ஒன்றுசேர்ப்பதில் வெற்றிகண்டார்கள். அந்த விடயத்துக்கு முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் அவர்கள் மிகவும் பிரயோசனமாக முறையில் பயன்படுத்தப்பட்டு வந்திருந்தார்.

இந்த நேரத்தில்தான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவை வீழ்த்துவதாக இருந்தால் முஸ்லிம் மக்களின் வாக்குகளையும், கணிசமான சு.கட்சியின் சிங்கள வாக்காளர்களையும் மஹிந்தவுக்கு எதிராக மாற்றவேண்டும் என்பதை ரகசியமான முறையில் தீர்மானித்தார்கள். 

அந்த திட்டத்தின் பிரகாரம்தான் முஸ்லிம் மக்களுக்கு மஹிந்தவின் ஆட்சியில் பாதுகாப்பில்லை என்று காட்டுவதற்காக இந்த ஞானசாராவின் இயக்கத்தினூடாக முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படவைக்க ஆரம்பித்தார்கள். இந்த திட்டத்திற்கு நோர்வே ஊடாக மேற்குலகமும், டயஸ்போராக்களும் தங்களது திட்டங்களை மிகக் கட்சிதமாக நிறைவேற்ற தொடங்கினார்கள். இதற்கு சார்பாக முஸ்லிம்களிலிருந்தும் சில கோடாரிக்காம்புகளை விலைக்கு வாங்கியும் செயல்பட வைத்தார்கள்.  

பொதுபலசேனாவின் நடவடிக்கைகளின் மீது மஹிந்தவுக்கு சந்தேகம் ஏற்படாதவாறும், பொதுபல சேனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவிடாமலும்,  மஹிந்தவின் ஆட்சியில் பங்காளிகளாக இருந்த சம்பிக்க, ராஜித போன்றவர்களும் இன்னும் பலர் பேரும் கவணித்துக் கொண்டார்கள். இந்த திட்டத்தை அறிந்துகொள்ளாத மஹிந்த அவர்கள் இவர்களின் கதைகளை நம்பி பொதுபலசேனாவுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தவறியிருந்தார். இந்த விடயங்களை மேற்குலக ஊடகங்களும், உள்ளூர் ஊடகங்களும், டயஸ்போராக்களின் கைக்கூலிகளாக செயல்பட்ட பல இணையதளங்களும், முஸ்லிம்களின் உள்ளே இருந்த சில கைக்கூலிகளும் இந்த இனவாத செயல்பாடுகளை தினம் தினம் விமர்சிக்க துவங்கினார்கள். இந்த விடயங்கள் அப்பாவி முஸ்லிம் மக்களை பெறுமளவு பாதித்து வந்ததை மஹிந்த அணியினர் கடைசிவரையும் அறிந்திருக்கவில்லை என்பதே உண்மையாகும்.

இதற்கான உச்சக்கட்டமாக அளுத்கமையில் இனக்கலவரத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். இந்தக்கலவரத்தை மேற்குலக ஊடகங்களிலும், உள்ளூர் ஊடகங்களிலும் ஒன்றுக்கு பத்து தரம் ஔி ஒலி பரப்பிக்கொண்டேயிருந்தார்கள். அதேநேரம் இந்தத் திட்டத்துக்கு ரகசியாமான முறையில்  கைக்கூலிகளாக இருந்து கொண்டு இயங்கிவந்த சில முஸ்லிம் முக்கியஸ்தர்கள் அவர்களின் பங்குக்கு நன்றாகவே கூவிக்கொண்டிருந்தார்கள். இந்த சதி நாடகம் நன்றாகவே பயன்பட ஆரம்பித்திருந்தது.

இந்த நிலையில்தான் 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் வந்தது. அந்த தேர்தலில் சம்பிக்க, ராஜித, மைத்ரி போன்ற இன்னும் பலர் மஹிந்தவுக்கு ஆப்பு வைத்தார்கள். இதனால் சு.கட்சியின் வாக்குகளும் மஹிந்தவுக்கு எதிராக மாற்றமடைந்திருந்தது. அதேபோன்று முஸ்லிம்களின் வாக்குகளும், தமிழர்களின் வாக்குகளும், மலையக மக்களின் வாக்குகளும் மஹிந்தவுக்கு எதிராக மாறியதன் காரணமாக அந்த தேர்தலில் அதிர்ச்சி தரும் விதமாக மஹிந்த தோற்கடிக்கப்பட்டார். அத்தோடு அவர்களின் திட்டமும் பூரணப்படுத்தப்பட்டது.

இன்று கூட மேற்குலகமும், டயஸ்போராக்களும் மஹிந்தவுக்கு எதிரான விடயத்தில் மிகவும் வெளிப்படையாக செயல்படுவதை நாம் கண்டுவருகின்றோம். இதுதான் உண்மை நிலையென்பதை முஸ்லிம்களும் புரிந்து வருகின்றார்கள். அதன் தாக்கம்தான் சென்ற உள்ளூராட்சி தேர்தர்தலில் முஸ்லிம்கள் ஐ.தே.கட்சிக்கு எதிராக காட்டியிருந்தார்கள் எனலாம்.

இந்த நிலையில் பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார அவர்கள் எதிர்பாராதவிதமான நிகழ்வாக, நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற காரணத்தை முன் வைத்து நீதிமன்றம் அவருக்கு ஆறுவருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. இந்த சிறைத்தண்டனை கைதியாக உள்ள ஞானசாரா அவர்களை இதுவரை மஹிந்தவோ அல்லது அவர் சார்ந்தவர்களோ அவருக்கு அனுதாபத்தை தெரிவிக்கவுமில்லை, அவரைச் சென்று பார்வையிடவும் இல்லை.

இந்த நிலையில் அவருடைய விடுதலைக்காக ஐ.தே.கட்சியின் பிரபலஙகளும் இன்னும் சிலபேரும் குரல் கொடுத்துவரும் வேளையில், முஸ்லிம்கள் சார்பாக அசாத்சாலியும் அவரோடு சேர்ந்த சிலரும் சிறைச்சாலை சென்று ஞானசார அவர்களை சந்தித்து ஆர்தல் கூறிவிட்டு வந்தவிடயம் ஊடகங்களில் பகிரங்கமாகவே காண்பிக்கப் பட்டிருந்தது. ஞானசாராவின் மீதான அசாத்சாலி அவர்களின் இந்த திடீர் பாசமானது ஆச்சரியமான ஒன்றல்ல, இவர்தான் ஞானசாராவுக்கு பின்னாலிருந்து இயங்கும் முஸ்லிம் கோடாரிக்காம்பு என்று முன்னமே சில முஸ்லிம் புத்திஜீவிகள் அறிந்தே வைத்திருந்தது மட்டுமல்ல, அவ்வப்போது இதனை சூசகமாகவும் குறிப்பிட்டும் வந்தனர்.

இந்த விடயத்தை முஸ்லிம்களில் பலபேர் நம்ப மறுத்திருந்தார்கள். ஆனால் இன்று அது வெட்டவெளிச்சமாக இறைவன் காட்டிவிட்டான். ஒரு காலத்தில் இந்த அசாத்சாலி அவர்கள் பொதுபலசேனா செயலாளர் ஞானசாரா அவர்களை கடுமையாக விமர்சித்த ஒருவராவார். தம்புள்ள பள்ளிவாசல் பிரச்சினை தொடக்கம் அளுத்கம பிரச்சினைகள் வரை அணுஅணுவாக விமர்சித்தவர்களில்  இந்த அசாத்சாலி அவர்கள் முதலிடத்தில் இருந்தார். இவருடைய திட்டத்தின் உள்நோக்கத்தை அறிந்திராத அப்பாவி முஸ்லிம்கள் இவரை ஒரு கதாநாயகனாகவே பார்க்கத் துவங்கிய காலங்களும் உண்டு. இப்படிப்பட்டவரின் ரகசிய திட்டங்களை அறிந்து வைத்துள்ள இறைவன் இவருடைய செயல்பாடுகளுக்கு தோல்விக்கு மேல் தோல்வியையே ஏற்படுத்தி வருகின்றான். 

இப்படப்பட்ட அசாத்சாலி அவர்கள் இன்று ஞானசாரா அவர்களை சிறைச்சாலை சென்று சந்திக்கின்றார் என்றால். இப்போது முஸ்லிம்களுக்கு விளங்கிவிட்டது இவர் யார் என்பது. 

ஆகவே முஸ்லிம் மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் மஹிந்தவை வீழ்த்துவதற்காகவே இவர்களும், ஞானசாராவும், மேற்குலகமும், டயஸ்போராக்களும், தமிழ் தரப்பினரும், ராஜித, சம்பிக்க, சந்திரிக்கா போன்றவர்களும் ரகசியமாக முறையில்  இயங்கினார்கள் என்பதையும், அதனால்தான் முஸ்லிம்களின் உயிர் உடமைகளில் விளையாடினார்கள் என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும். அதற்கான தண்டனைகளை நிச்சயமாக இறைவன் வழங்குவது மட்டுமல்ல, இந்த சதிகாரர்களின் முகத்தையும் வெளிக்காட்டித் தறுவான் என்பதிலும் நாம் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை என்பதே எங்களின் கருத்தாகும்.
ஞாசாராவும் அவர்களது முஸ்லிம் கூட்டாளிகளும்..! ஞாசாராவும் அவர்களது முஸ்லிம் கூட்டாளிகளும்..! Reviewed by Vanni Express News on 12/23/2018 12:11:00 PM Rating: 5